2018 ஆம் ஆண்டு கிக்ஸ் மாடலின் உற்பத்தியை தொடங்க இருக்கும் நிசான்

நிசான் நிறுவனம் சில நாட்களுக்கு முன்பு கிக்ஸ் கிராஸ் ஓவர் மாடலை வெளிப்படுத்தியது. இந்த மாடல் ரியோ ஒலிம்பிக் போட்டியின் தொடக்க  விழாவில் அறிமுகப்படுத்தப்படும். அதை தொடர்ந்து இந்த மாடல் 2017 ஆம் ஆண்டு இந்தியாவில் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் தற்போது இதன் உற்பத்தி இந்தியாவில் 2018 ஆம் ஆண்டு மே மாதம் தான் தொடங்கப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. 

சந்தனம் மற்றும் கருப்பு வண்ண கலவையில் உட்புறம் சிறப்பாக வடிவமைக்கப்பட்டுள்ளது. உட்புறம் மற்றும் வெளிப்புறம் அனைத்திலும் இந்த மாடல் சிறப்பான தோற்றத்தை கொண்டுள்ளது. இந்த மாடல் மக்களிடம் மிகுந்த  வரவேற்பை பெரும் என்பதில் எந்த மாற்றமும் இல்லை.

இந்த மாடலின் படங்கள் மட்டுமே இதுவரை  வெளியிடப்பட்டுள்ளது. மற்ற எந்த விவரமும் வெளியிடப்படவில்லை. எனினும் இந்த மாடல் பெட்ரோல் மற்றும் டீசல் என இரண்டு எஞ்சின்களிலும் வெளியிடப்படும் என எதிர்பார்க்கபடுகிறது. மேலும் இந்த மாடல் தொடர்பான விவரங்கள் ஏதும் அதிகம் வெளியிடப்படவில்லை. முதலில் இந்த மாடல் அமெரிக்காவில் அறிமுகம் செய்யப்படும் பிறகு மற்ற நாடுகளில் வெளியிடப்படும். தொடர்ந்து விவரங்களை தெரிந்து கொள்ள மௌவளுடன் தொடர்பில் இருங்கள்.

மௌவலின் ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.