நிசான் கிக்ஸ் மாடலின் உட்புறத் தோற்றம் வெளிப்படுத்தப்பட்டது

நிசான் நிறுவனம் சில நாட்களுக்கு முன்பு கிக்ஸ் கிராஸ் ஓவர் மாடலின் சில டீசர் படங்களை வெளியிட்டது. தற்போது கிக்ஸ் மாடலின் உட்புறத் தோற்றத்தை வெளிப்படுத்தியுள்ளதுநிசான் நிறுவனம். இந்த மாடல் ரியோ ஒலிம்பிக் போட்டியின் தொடக்க  விழாவில் அறிமுகப்படுத்தப்படும். அதை தொடர்ந்து இந்த மாடல் 2017 ஆம் ஆண்டு இந்தியாவில் வெளியிடப்படும் என தெரிகிறது. முதலில் இந்த மாடல் அமெரிக்காவில் அறிமுகம் செய்யப்படும் பிறகு மற்ற நாடுகளில் வெளியிடப்படும்.

சந்தனம் மற்றும் கருப்பு வண்ண கலவையில் உட்புறம் சிறப்பாக வடிவமைக்கப்பட்டுள்ளது. உட்புறம் மற்றும் வெளிப்புறம் அனைத்திலும் இந்த மாடல் சிறப்பான தோற்றத்தை கொண்டுள்ளது. இந்த மாடல் மக்களிடம் மிகுந்த  வரவேற்பை பெரும் என்பதில் எந்த மாற்றமும் இல்லை.

இந்த மாடலின் படங்கள் மட்டுமே இதுவரை  வெளியிடப்பட்டுள்ளது. மற்ற எந்த விவரமும் வெளியிடப்படவில்லை. எனினும் இந்த மாடல் பெட்ரோல் மற்றும் டீசல் என இரண்டு எஞ்சின்களிலும் வெளியிடப்படும் என எதிர்பார்க்கபடுகிறது. மேலும் இந்த மாடல் தொடர்பான விவரங்கள் ஏதும் அதிகம் வெளியிடப்படவில்லை. தொடர்ந்து விவரங்களை தெறித்து கொள்ள மௌவளுடன் தொடர்பில் இருங்கள்.

மௌவலின் ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.