ரூ 9.55 லட்சம் ஆரம்ப விலையில் விலையில் வெளியிடப்பட்டது நிசான் கிக்ஸ்

நிசான் நிறுவனம் இறுதியாக கிக்ஸ் SUV மாடலை ரூ 9.55 லட்சம் ஆரம்ப விலையில் இந்தியாவில் வெளியிட்டுள்ளது.  நிசான் நிறுவனம் 2016 ஆம் ஆண்டு கிக்ஸ் கிராஸ் ஓவர் மாடலை வெளிப்படுத்தியது. இதை தொடர்ந்து இந்த மாடல் ரியோ ஒலிம்பிக் போட்டியின் தொடக்க விழாவில் அதிகாரபூர்வமாக அறிமுகப்படுத்தப்பட்டது.

வேரியன்ட் வாரியாக ஷோரூம் விலை விவரம்: 

  • XL (P) - ரூ 9.55 லட்சம்
  • XL (D) - ரூ 10.85 லட்சம்
  • XV(P) - ரூ 10.95 லட்சம்
  • XV (D) - ரூ 12.49 லட்சம்
  • XV Pre (D) - ரூ 13.65 லட்சம்
  • XV Pre Option (D) - ரூ 14.65 லட்சம்

இந்த மாடல் டஸ்டர், கேப்டர் மற்றும் டெர்ரானோ போன்ற மடல்கள் தயாரிக்கப்பட்ட அதே B0 பிளாட்பார்மில் தான் தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த மாடலில் டஸ்டர் மற்றும் கேப்டர் மாடலில் உள்ள அதே 1.5 லிட்டர் பெட்ரோல் மற்றும் டீசல் எஞ்சின் தான் பொருத்தப்பட்டுள்ளது. இதன் பெட்ரோல் எஞ்சின் 106Bhp திறனையும் மற்றும் 142Nm இழுவைத்திறனையும் வழங்கும். மேலும், இதன் டீசல் எஞ்சின் 110Bhp திறனையும் மற்றும் 240Nm இழுவைத்திறனையும் வழங்கும். இந்த இரண்டு எஞ்சினும் முறையே ஐந்து மற்றும் ஆறு ஸ்பீட் கொண்ட மேனுவல் ட்ரான்ஸ்மிஷனில் மட்டுமே கிடைக்கும். ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன் தேர்வில் தற்போது வெளியிடப்படவில்லையென்பது குறிப்பிடத்தக்கது

இந்த மாடலின் உட்புறம் கருப்பு மற்றும் பிரௌன் வண்ண கலவையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த மாடலில் 8-இன்ச் இன்போடைன்மெண்ட் சிஸ்டம், 360-டிகிரி கேமரா, காற்றுப்பை, ABS மற்றும் EBD என ஏராளமான வசதிகள் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த மாடல் ஹூண்டாய் க்ரெட்டா, மருதி S-கிராஸ் மற்றும் ரெனோ கேப்டர் போன்ற மாடல்களுக்கு கடும் போட்டியாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மௌவலின் ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.