கிக்ஸ் மாடலின் வரைபடங்களை இந்தியாவில் வெளியிட்டது நிசான்

நிசான் நிறுவனம் சில நாட்களுக்கு முன்பு இந்தியாவில், தனது வியாபாரத்தை அதிகரிக்க இருப்பதாக அறிவித்தது. அதன்படி, விரைவில் இந்தியாவில் வெளியிடப்பட உள்ள கிக்ஸ் மாடலின் வரைபடங்களை வெளியிட்டுள்ளது. நிசான் நிறுவனம் 2016 ஆம் ஆண்டு கிக்ஸ் கிராஸ் ஓவர் மாடலை வெளிப்படுத்தியது. இதை தொடர்ந்து இந்த மாடல் ரியோ ஒலிம்பிக் போட்டியின் தொடக்க விழாவில் அதிகாரபூர்வமாக அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த மாடல் தற்போது 2019 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் இந்தியாவில் வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த மாடல் நிசான் நிறுவனத்தின் புதிய V-பிளாட்பார்மில் தயாரிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த மாடல் ஒரு சில நாடுகளில் ஏற்கனவே விற்பனையில் இருப்பது குறிப்பிடத்தக்கது. இந்த மாடல் இந்தியாவில் டஸ்ட்டர் மாடலில் உள்ள எஞ்சினுடன் வெளியிடப்படும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. சந்தனம் மற்றும் கருப்பு வண்ண கலவையில் உட்புறம் சிறப்பாக வடிவமைக்கப்பட்டுள்ளது. உட்புறம் மற்றும் வெளிப்புறம் அனைத்திலும் இந்த மாடல் சிறப்பான தோற்றத்தை கொண்டுள்ளது. இந்த மாடல் மக்களிடம் மிகுந்த வரவேற்பை பெரும் என்பதில் எந்த மாற்றமும் இல்லை.  தொடர்ந்து விவரங்களை தெரிந்து கொள்ள மௌவளுடன் தொடர்பில் இருங்கள்.

மௌவலின் ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.