ரூ 12.22 லட்சம் விலையில் வெளியிடப்பட்டது நிசான் டெர்ரானோ ஸ்போர்ட் சிறப்பு பதிப்பு

நிசான் நிறுவனம் டெர்ரானோ ஸ்போர்ட் சிறப்பு பதிப்பு மாடலை ரூ 12.22 லட்சம் டெல்லி ஷோரூம் விலையில் வெளியிட்டுள்ளது. இந்த மாடல் XL(O) வேரியன்ட்டில் 85bhp திறன் கொண்ட 1.5 லிட்டர் டீசல் எஞ்சின் ஆப்ஷனில் மட்டுமே வெளியிடப்பட்டுள்ளது. பெட்ரோல் எஞ்சினில் வெளியிடப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 

நிசான் டெர்ரானோ ஸ்போர்ட் சிறப்பு பதிப்பு மாடலில் கொடுக்கப்பட்டுள்ள மாற்றங்கள்:

  • ஆடியோ விசுவல் நேவிகேஷன்
  • புதிய ஸ்போர்ட்டி தரை விரிப்பு 
  • புதிய ஸ்போர்ட்டி சீட் கவர்
  • புதிய பகல் நேரத்தில் ஒளிரும் LED விளக்குகள் 
  • புதிய டைனமிக் பாடி கிராபிக்ஸ்
  • புதிய வீல் அர்ச் கிளாடிங்
  • புதிய கருப்பு நிற ரூப்

நிசான் டெர்ரானோ ஸ்போர்ட் சிறப்பு பதிப்பு மாடல் 1.5 லிட்டர் லிட்டர் டீசல் என்ஜினில் மட்டுமே கிடைக்கும். இந்த  எஞ்சின் 85 bhp (3750 rpm) திறனும் 200Nm (1900rpm) டார்க் எனும் இழுவைதிறனும் கொண்டது. மேலும் இந்த மாடலில் ஐந்து ஸ்பீட் கொண்ட மேனுவல் டிரான்ஸ்மிஷன் பொருத்தப்பட்டுள்ளது. மேலும் இந்த மாடலில் இரண்டு காற்றுப்பை, ABS மற்றும் EBD ஆகியவையும் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

மௌவலின் ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.