பாரிஸ் மோட்டார் கண்காட்சியில் வெளிப்படுத்தப்படும் 2017 நிசான் மைக்ரா

ஜப்பானை சேர்ந்த நிசான் நிறுவனம் ஐந்தாம் தலைமுறை மைக்ரா மாடலை 2016 ஆம் ஆண்டு பாரிஸ் மோட்டார் கண்காட்சியில் வெளிப்படுத்த இருக்கிறது. இணையத்தில் கசிந்த சில படங்கள் மற்றும் ஆட்டோ மொபைல் துறையில் பேசப்படும் சில தகவல்களின் அடிப்படையில் பார்த்தால் இந்த மாடல் முழுவதும் புதிய வடிவத்தில் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் இந்த மாடல் நிசான் ஸ்வெ கான்செப்ட்டின் அடிப்படையில்  இருக்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. மற்ற நாடுகளில் அதிக திறன் கொண்ட என்ஜினுடன் வெளிப்பட்டாலும் இந்தியாவில் அதே 1.2 லிட்டர் பெட்ரோல் மற்றும் 1.5 லிட்டர் டீசல் என்ஜின் உடன் தான் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

இந்த மாடல் தொடர்பான அனைத்து மற்றும் அதிகாரப்பூர்வ தகவல்கள் 2016 பாரிஸ் மோட்டார் கண்காட்சியில் தெரிய வரும். மேலும் விவரங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள மௌவலுடன் தொடர்பில் இருங்கள்.

மௌவலின் ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.