கிக்ஸ் கிராஸ் ஓவர் எனும் புதிய மாடலை விரைவில் அறிமுகம் செய்கிறது நிசான்

நிசான் நிறுவனம் கிக்ஸ் கிராஸ் ஓவர் எனும் புதிய மாடல் விரைவில் அறிமுகம் செய்யப்படும் என அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. முதலில் இந்த மாடல் அமெரிக்காவில் அறிமுகம் செய்யப்படும் பிறகு மற்ற நாடுகளில் வெளியிடப்படும்.

இந்த மாடலின் படங்கள் மட்டும் வெளியிடப்பட்டுள்ளது. மற்ற எந்த விவரமும் வெளியிடப்படவில்லை. எனினும் இந்த மாடல் பெட்ரோல் மற்றும் டீசல் என இரண்டு எஞ்சின்களிலும் வெளியிடப்படும் என எதிர்பார்க்கபடுகிறது. 

நிசான் நிறுவனம் டெல்லி வாகன கண்காட்சியில் X - ட்ரைல் மாடலை மீண்டும் வெளியிடும் என எதிர்பார்க்கபடுகிறது. இது டொயோடா பார்சுனர், செவ்ரோலேட் ட்ரைல்ப்ளேசர் மற்றும் மிட்சுபிசி பஜிரோ போன்ற மாடல்களுக்கு போட்டியாக இருக்கும். 

மௌவலின் ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.