மாருதி சுசுகி பலேனோ RS மாடலின் முன்பதிவு தொடங்கப்பட்டது

மாருதி சுசூகி நிறுவனம் பலேனோ RS மாடலின் முன்பதிவை அதிகாரப்பூர்வமாக  தொடங்கியுள்ளது. இந்த மாடலுக்கு ரூ. 11,000 முன்பணமாக செலுத்தி முன்பதிவு செய்து கொள்ளலாம். மாருதி சுசுகி  நிறுவனம் பலேனோ மாடலின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட பலேனோ RS மாடலை 2016 டெல்லி வாகன கண்காட்சியில்  வெளிப்படுத்தியது குறிப்பிடத்தக்கது.

இந்த மாடலில் வெளிப்புறம் மற்றும் உட்புறத்தில் சில ஒப்பனை மாற்றங்களும் குறிப்பாக எஞ்சினிலும் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. வெளிப்புறத்தில் ஸ்போர்டியாக சில பிளாஸ்டிக் கிலாடிங்குகள் மற்றும் புதிய அலாய் வீல் ஆகியவையும் உட்புறத்தில் டச் ஸ்க்ரீன் இன்போடைன்மெண்ட் சிஸ்டம், ஆட்டோமேட்டிக் கிளைமேட் கன்ட்ரோல் என ஏராளமான வசதிகளும் கொடுக்கப்பட்டுள்ளது.

இந்த மாடலில் 998 cc கொள்ளளவு கொண்ட 1.0 லிட்டர் டர்போ சார்ஜ் என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இது 100 Bhp திறனையும் 150 Nm இழுவைதிறனையும் வழங்கும். இந்த மாடலில் 5 ஸ்பீட் மேனுவல் கியர் பாக்ஸ் பொருத்தப்பட்டுள்ளது. இந்த மாடல் ரூ. 8 லட்சம் விலையில் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

மௌவலின் ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.