2016 ஆம் ஆண்டு டெல்லி வாகன கண்காட்சிக்கான முன்பதிவு தொடங்கியது

2016 ஆம் ஆண்டு டெல்லியில் நடைபெறும் வாகன கண்காட்சிக்கான முன்பதிவு தொடங்கியது. நுழைவுசீட்டை www.autoexpo-themotorshow.in மற்றும்  www.bookmyshow.com ஆகிய இரண்டு இணையதளங்களிலும் முன்பதிவு செய்யலாம்.

காலை 10 மணி முதல் மதியம் 1மனி வரை செல்வதற்கு 600 ரூபாய் ஆகவும் மதியம் 1 மணி முதல் மாலை 6 மணி வரை வார நாட்களில் செல்வதற்கு 300 ரூபாய் ஆகவும் வார இறுதி நாட்களில் செல்வதற்கு 400 ரூபாய் ஆகவும் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஒரு நபர் அதிகபட்சமாக 10 நுழைவுசீட்டு வரை மட்டுமே முன்பதிவு செய்ய முடியும். டிசம்பர் 31 வரை 3 நுளைவுசீட்டிற்கு மேல் முன்பதிவே செய்பவர்களுக்கு இலவசமாக வீட்டிற்கே அனுப்பப்படும் ஆனால் அதற்கு மேல் முன்பதிவே செய்பவர்களுக்கு ரூ.75 கட்டணம் வசூலிக்கப்படும்.  

2016 ஆம் ஆண்டு வாகன உதிரி பாகங்களுக்கான கண்காட்சி பிப்ரவரி 4 ஆம் தேதி முதல் 7 ஆம் தேதி வரை டெல்லியில் உள்ள பிரகதி மைதானத்திலும் வாகன கண்காட்சி 5 ஆம் தேதி முதல் 9 ஆம் தேதி வரை கிரேடர் நொய்டாவில் உள்ள இந்திய வர்த்தக மையத்திலும் நடைபெறும். 

நுழைவுசீட்டு முன்பதிவிற்கான நேரடி லிங்க்.

http://www.autoexpo-themotorshow.in/ticket.aspx

http://in.bookmyshow.com/exhibition/auto-expo-the-motor-show/


மௌவலின் ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.