10 வருடங்களுக்கு மேல் பழமையான டீசல் கார்களுக்கு டெல்லியில் தடை

10 வருடங்களுக்கு மேல் பழமையான டீசல் கார்களை இயக்க டெல்லியில் தேசிய பசுமை தீர்ப்பாயம் தடை விதித்துள்ளது. அனைத்து கார்களும் போக்குவரத்தில் இருந்து உடனடியாக விளக்கிக் கொள்ளப்பட வேண்டும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே 2 லிட்டர் அல்லது அதற்கு மேல் கொள்ளளவு கொண்ட புதிய டீசல் என்ஜின் கார்கள் பதிவு செய்யவும் தடை விதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 

இதுவரை  விதிக்கப்பட்ட தடைகளால் ஆட்டோ மொபைல் நிறுவனங்கள் தான் பாதிக்கப்பட்டு வந்தன ஆனால் இந்த தடை மூலம் நேரடியாக மாக்கள் தான் பாதிக்கப்பட உள்ளனர். மேலும் நீதிமன்றம் 10 வருடங்களுக்கு மேலான கார்களின் பதிவை ரத்து செய்ய வேண்டும் என அரசுக்கு பரிந்துரை செய்துள்ளது. மேலும் சாலை மற்றும் போக்குவரத்து துறையிடம் அந்த வாகனங்களின் தகவல்களையும் கோரியுள்ளது. 

மௌவலின் ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.