10 வருடங்களுக்கு மேல் பழமையான டீசல் கார்களுக்கு கேரளாவில் தடை

10 வருடங்களுக்கு மேல் பழமையான டீசல் கார்களை இயக்க  கேரளாவின் 6 நகரங்களில் தேசிய பசுமை தீர்ப்பாயம் தடை விதித்துள்ளது. ஒரு மாத காலத்திற்குள் அனைத்து கார்களும் போக்குவரத்தில் இருந்து விளக்கிக்   கொள்ளப்பட வேண்டும். மேலும் 2 லிட்டர் அல்லது அதற்கு மேல் கொள்ளளவு கொண்ட புதிய டீசல் என்ஜின் கார்கள் பதிவு செய்யவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த தடை அரசு வாகனங்களுக்கும் போக்குவரத்து வாகனங்களுக்கும் பொருந்தாது. 

இந்த தடை கொச்சி, திரிச்சூர், கோழிகோடு, கண்ணூர், திருவனந்தபுரம் மற்றும் கொல்லம் ஆகிய ஆறு நகரங்களுக்கு பொருந்தும். சில நாட்களுக்கு முன்பு தான் டெல்லியில் இதே போன்று தடை விதிக்கப்பட்டது. தற்போது கேரளாவிலும்  டீசல் கார்களுக்கு தடை விதிக்கப்பட்டிருப்பது ஆட்டோமொபைல் துறை வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுதியுள்ளது.

மௌவலின் ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.