ரெனோ க்விட் அவென்ஜர் சூப்பர் ஹீரோ சிறப்பு பதிப்பு மாடலின் படங்கள்

ரெனோ நிறுவனம் மார்வெல் அவென்ஜர் சூப்பர் ஹீரோக்களான அயர்ன் மேன் மற்றும் கேப்டன் அமெரிக்கா ஆகியோரின் சிறப்பு பதிப்பு க்விட் மாடலை வெளியிட்டுள்ளது. இந்த சிறப்பு பதிப்பு மாடல் சாதாரண மாடலை விட ரூ 29,900 அதிக விலை கொண்டது. மேலும் இந்த சிறப்பு பதிப்பு மாடலில் உட்புறம் மற்றும் வெளிப்புறத்தில் ஒப்பனை மாற்றங்கள் மட்டுமே செய்யப்பட்டுள்ளது.இந்த மாடல் பிரத்தியேகமாக அமேசான் இணையத்தின் மூலமாக மட்டுமே வாங்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. 

க்விட் அயர்ன் மேன் சூப்பர் ஹீரோ எடிசன் 
க்விட் அயர்ன் மேன் சூப்பர் ஹீரோ எடிசன் மாடல் சிவப்பு வண்ணத்தில் வெளிப்புறத்தில் புதிய கிராபிக்ஸ் கொடுத்து வடிவமைக்கப்பட்டுள்ளது. உட்புறத்திலும் சில சிவப்பு வண்ண அலங்காரங்கள் செய்யப்பட்டுள்ளது.

க்விட் கேப்டன் அமெரிக்கா சூப்பர் ஹீரோ எடிசன் 
க்விட் கேப்டன் அமெரிக்கா சூப்பர் ஹீரோ எடிசன் மாடல் வெள்ளை வண்ணத்தில் வெளிப்புறத்தில் புதிய கிராபிக்ஸ் கொடுத்து வடிவமைக்கப்பட்டுள்ளது. உட்புறத்திலும் சில ப்ளூ வண்ண அலங்காரங்கள் செய்யப்பட்டுள்ளது.

​​​​​​​

எஞ்சினில் எந்த மாற்றமும் இல்லை அதே 0.8 லிட்டர் மற்றும் 1.0 லிட்டர் எஞ்சின் தேர்வில் தான் கிடைக்கும். மேலும் இந்த மாடல் 5 ஸ்பீட் கொண்ட மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் ட்ரான்ஸ்மிஷனிலும் கிடைக்கும். மேலும் இந்த சிறப்பு பதிப்பு மாடல்கள் ஏப்ரல் மாதத்தில் அவென்ஜர்: இன்பினிட்டி வார் திரைப்படம் வெளியாகும் நேரத்தில் விநியோகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மௌவலின் ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.