இந்தியாவில் வெளியிடப்பட்டது போர்ச்சே 718 பாக்ஸ்டர் மற்றும் கேமன்

போர்ச்சே நிறுவனம் இந்தியாவில் அதிகாரப்பூர்வமாக 718 பாக்ஸ்டர் மற்றும் கேமன் மாடல்களை முறையே ரூ. 85.53 லட்சம் மற்றும் ரூ. 81.63 லட்சம் டெல்லி ஷோ ரூம் விலையில் வெளியிட்டுள்ளது. 718 பாக்ஸ்டர் மாடல் கன்வெர்ட்டிபிள் மாடலாகவும் 718 கேமன் மாடல் மூடிய மேற்க்கூரை கொண்ட மாடலாகவும் வெளியிடப்பட்டுள்ளது. இந்த மேம்படுத்தப்பட்ட மாடலில் உட்புறம் மற்றும் வெளிப்புறத்தில் சில ஒப்பனை மாற்றங்களும் என்ஜினும் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

முந்தய 3.5 லிட்டர் எஞ்சினுக்கு பதிலாக சிறிய 2.0 லிட்டர் டர்போ சார்ஜ் எஞ்சின் பொருத்தப்பட்டுள்ளது. எனினும் அதே அளவு திறனை இந்த என்ஜினும் வழங்கும். இந்த என்ஜின் 300 bhp திறனும் 380 Nm இழுவைதிறனும் கொண்டது. இந்த மாடல்  100 கிலோமீட்டர் வேகத்தை 4.7 வினாடிகளில்  கடக்கும் வல்லமை கொண்டது  மற்றும்  இந்த மாடல் அதிகபட்சமாக மணிக்கு 275 கிலோமீட்டர் வேகம் வரை செல்லும். மேலும் இந்த மாடலில் 7 ஸ்பீட் கொண்ட ஆட்டோமேட்டிக் கியர் பாக்ஸ் பொருத்தப்பட்டுள்ளது.

முன்புறத்தில் ஏர் இன் டேக்குகள், ஸெனான் முகப்பு விளக்குகள் மற்றும் பகல் நேரத்தில் ஒளிரும் LED விளக்குகள் ஆகியவைம் உட்புறத்தில் டேஸ் போர்டு, AC வென்ட் மற்றும் ஸ்டேரிங் வீல் ஆகியவையும் மாற்றப்பட்டுள்ளது.

மௌவலின் ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.