போர்சே 911 கரேரா மாடல் வெளிப்படுத்தப்பட்டது

போர்சே நிறுவனம் மேம்படுத்தப்பட்ட 911 கரேரா மாடலை ஃபிரான்க் ஃபுர்ட் மோட்டார் கண்காட்சியில் வெளியிடுவதாக இருந்த நிலையில் தற்போது 911 கரேரா மாடலை வெளிப்படுத்தியுள்ளது.  இந்த மாடலில் சில ஒப்பனை மாற்றங்களை செய்யப்பட்டுள்ளது.  குறிப்பாக பிளாட் சிக்ஸ் டர்போ சார்ஜ் பெட்ரோல் எஞ்சின் இந்த மாடலில் பொருத்தப்பட்டுள்ளது. 

இதன் இரண்டு மாடல்களிலும் ட்வின் டர்போ சார்ஜ் 3.0 லிட்டர் பெட்ரோல் என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. கரேரா மாடல் 365 bhp திறனும் 450 Nm இழுவைதிறனும் கொண்டதாகவும் கரேரா S மாடல்  415 bhp திறனும் 500 Nm இழுவைதிறனும் கொண்டதாகவும் இருக்கும். கரேரா மாடல்  100 கிலோமீட்டர் வேகத்தை 4.2 வினாடிகளிலும் கரேரா S மாடல் 3.9 வினாடிகளிலும் கடக்கும் வல்லமை கொண்டது  மற்றும்  இதன் கரேரா மாடல் அதிகபட்சமாக மணிக்கு 294 கிலோமீட்டர் வேகம் வரையும் கரேரா S  மாடல் அதிகபட்சமாக மணிக்கு 307 கிலோமீட்டர் வேகம் வரையும் செல்லும்.

இந்த மாடலின் வெளிப்புறத்தில் முகப்பு விளக்குகளும் பின்புற விளக்குகளும் மாற்றப்பட்டுள்ளது. முன்புறம் உள்ள ஏர் டக்ட்டுகள் திறந்து மூடும் வசதி கொண்டது. இந்த மாடலில் சஸ்பென்சன் சிஸ்டமும் சாக் அப்சார்பர் சிஸ்டமும் மாற்றப்பட்டுள்ளது. மேலும் இந்த மாடலில் 40 மில்லி மீட்டர் வரை உயரத்தை 5 வினாடிகளில் அதிகரிக்க முடியும். 

இந்த மாடல் ஃபிரான்க் ஃபுர்ட் மோட்டார் கண்காட்சியில் வெளியிடப்படும். இந்த மாடல் முதலில் ஐரோப்பாவில் வெளியிடப்படும் பிறகு இந்தியாவில் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மௌவலின் ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.