ரூ 3.88 கோடி விலையில் வெளியிடப்பட்டது போர்சே 911 GT2 RS

போர்சே நிறுவனம் புதிய 911 GT2 RS மாடலை ரூ 3.88 கோடி ஷோரூம் விலையில் வெளியிட்டுள்ளது. இந்த மாடல் தான் 911 மாடல்களிலேயே அதிக விலை மற்றும் அதிக வேகம் கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது. ஏற்கனவே போர்சே 911 மாடல் பல வேரியன்ட்டுகளில் இந்தியாவில் கிடைக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

போர்சே 911 GT2 RS மாடலில் 3.8 லிட்டர் ஆறு சிலிண்டர் டர்போ சார்ஜ் என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இது 686 bhp திறனும் 750Nm இழுவைதிறனும் கொண்டது. இந்த மாடல் ஏழு ஸ்பீட் கொண்ட ZF டியூவல் கிளட்ச் ஆட்டோமேட்டிக் ட்ரான்ஸ்மிஷனில் கிடைக்கும். இந்த மாடல் 100 கிலோமீட்டர் வேகத்தை 2.8 வினாடிகளிலும் அதிகபட்சமாக மணிக்கு 340 கிலோமீட்டர் வேகம் வரை செல்லும். மேலும் இந்த மாடல் பின்புற வீல் டிரைவ் சிஸ்டம் கொண்டது.

போர்சே 911 GT2 RS மாடல் மற்ற மாடல்களை விட குறைவான எடை கொண்டது. மேலும் இந்த மாடல் Nürburgring Nordschleife போட்டியில் அதிக வேகமான மாடல் என்ற சாதனையையும் படைத்துள்ளது குறிப்பிடத்தக்கது. 

மௌவலின் ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.