ரூ 2.31 கோடி விலையில் வெளியிடப்பட்டது போர்ச்சே 911 GT3

போர்ச்சே நிறுவனம் புதிய போர்ச்சே 911 GT3 மாடலை ரூ 2.31 கோடி ஷோரூம் விலையில் வெளியிட்டுள்ளது. ஏற்கனவே போர்ச்சே 911 மாடல் பல வேரியன்ட்டுகளில் இந்தியாவில் கிடைக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. போர்ச்சே 911 GT3 மாடலில் அதிகம் ட்ராக் சம்பந்தமான உபகரணங்கள் தான் கொடுக்கப்பட்டுள்ளது. 

போர்ச்சே 911 GT3  மாடலில் 4.0 லிட்டர் ஆறு சிலிண்டர் என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இது 500 bhp திறனும் 460 Nm இழுவைதிறனும் கொண்டது. இந்த மாடல் ஆறு ஸ்பீட் கொண்ட மேனுவல் மற்றும் ஏழு ஸ்பீட் கொண்ட PDK ஆட்டோமேட்டிக் ட்ரான்ஸ்மிஷனில் கிடைக்கும். இதன் ஆட்டோமேட்டிக் மாடல் 100 கிலோமீட்டர் வேகத்தை 3.4 வினாடிகளிலும் அதிகபட்சமாக மணிக்கு 318 கிலோமீட்டர் வேகம் வரை செல்லும். மற்றும் இதன் மேனுவல் மாடல் 100 கிலோமீட்டர் வேகத்தை 3.9 வினாடிகளிலும் அதிகபட்சமாக மணிக்கு 320 கிலோமீட்டர் வேகம் வரை செல்லும் வல்லமை கொண்டது. மேலும் இந்த மாடல் பின்புற வீல் டிரைவ் சிஸ்டம் கொண்டது.

இந்த மாடலில் பின்புற ஆக்சில் ஸ்டேரிங் சிஸ்டமும் கொடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த மாடலில் ரேஸிங் டைனமிக் சேஸி மற்றும் சில ரேஸிங் சம்பந்தமான உபகரணங்களும் கொடுக்கப்பட்டுள்ளது.

மௌவலின் ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.