வெளிப்படுத்தப்பட்டது மேம்படுத்தப்பட்ட போர்ச்சே 911 GTS

போர்ச்சே நிறுவனம் மேம்படுத்தப்பட்ட 911  GTS மாடலை 2017 ஆம் ஆண்டு டெட்ராய்ட் மோட்டார் கண்காட்சியில் வெளிப்படுத்தியுள்ளது. இந்த மாடல் கூப், கன்வெர்ட்டிபிள் மற்றும் டார்கா பாடி வடிவங்களில் கிடைக்கும். ஏற்கனவே விற்பனையில் இருக்கும் 911 கரேரா வேரியாண்டுகளுடன் இந்த மாடலும் கூடுதலாக வெளிப்படுத்தப்பட்டுள்ளது.

இந்த மாடலில் சிக்ஸ் டர்போ சார்ஜ் 3.0 லிட்டர் பெட்ரோல் என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இது 444 bhp திறனும் 550 Nm இழுவைதிறனும் கொண்டது. இந்த மாடல்  100 கிலோமீட்டர் வேகத்தை 3.6 வினாடிகளில்  கடக்கும் வல்லமை கொண்டது  மற்றும்  இந்த மாடல் அதிகபட்சமாக மணிக்கு 312 கிலோமீட்டர் வேகம் வரை செல்லும்.

இந்த மாடல் இந்தியாவில் தோராயமாக ரூ.1 கோடி விலையில் 2017  ஆம் ஆண்டு மத்தியில் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மௌவலின் ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.