ஜெனிவா மோட்டார் கண்காட்சியில் வெளிப்படுத்தப்படும் டாடா 45X பிரீமியம் ஹேட்ச்

டாடா நிறுவனம் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ஹாரியர் SUV மாடலை சில நாட்களுக்கு முன்பு வெளியிட்டது. தற்போது, அடுத்த மாடலை வெளியிடுவதற்கான வேலையை தொடங்கியுள்ளது. டாடா நிறுவனம் புத்தம் புதிய 45X பிரீமியம் ஹேட்ச் கான்செப்ட் மாடலை வரும் மார்ச் மாதம் நடைபெறும் ஜெனிவா மோட்டார் கண்காட்சியில் வெளிப்ப்டுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இந்த மாடல் ஜூன் அல்லது ஜூலை மாதத்தில் இந்தியாவில் வெளியிடப்படும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. இந்த மாடல் முதல் முறையாக 2018 ஆம் ஆண்டு டெல்லி வாகன கண்காட்சியில் அறிமுகப்படுத்தப்பட்டது.

இந்த மாடல் டாடா வின் மேம்படுத்தப்பட்ட இம்பேக்ட் 2.0 எனும் டிசைன் தத்பரியத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதே இம்பேக்ட் 2.0 டிசைன் தத்பரியத்தில் தான் H5X SUV கான்செப்ட் மாடலும் வடிவமைக்கப்பட்டுள்ளது. டாடா 45X கான்செப்ட் மாடல் வெளிப்புறத்தில் ஒரு பிரீமியம் மாடல் போன்ற தோற்றத்தை தருகிறது. இந்த மாடல் டாடா நிறுவனத்தின் புதிய அட்வான்ஸ்ட் மாடுலர் பிளாட்பார்மில் Advanced Modular Platform (AMP) தயாரிக்கப்பட்டுள்ளது. டாடா நிறுவனம் உட்புறம் மற்றும் எஞ்சின் தொடர்பான விவரங்களை வெளியிடவில்லை. இந்த மாடல் வெளியிடப்படும் போது பிரீமியம் ஹேட்ச் செக்மென்ட்டில் மாருதி சுசூகி பலேனோ, ஹோண்டா ஜாஸ் மற்றும் வோல்க்ஸ்வேகன் போலோ போன்ற மாடல்களுக்கு போட்டியாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மௌவலின் ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.