தயாரிப்பு நிலை கிராஸ் மாடலை வெளிப்படுத்தியது டட்சன்

டட்சன் நிறுவனம் கிராஸ் கான்செப்ட்டின் தயாரிப்பு நிலை மாடலை இந்தோனேசியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது.  இந்த மாடல் கோ கிராஸ் எனும் பெயரில் 2015 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் வெளிப்படுத்தப்பட்டது. மேலும் 2016 டெல்லி வாகன கண்காட்சியிலும் காட்சிப்படுத்தப்பட்டது. இது டட்சன் கோ மற்றும் கோ + கான்செப்டின் அடிப்படையில் வடிவமைக்கப்பட்ட கிராஸ் ஓவர் மாடல் ஆகும். எனினும் இந்த மாடலில் ஏராளாமான புதிய வசதிகள் மற்றும் உபகரணங்கள் கொடுக்கப்பட்டுள்ளது.

டட்சன் கோ மற்றும் கோ + மாடலை விட சிறப்பான தோற்றமும் கம்பீரமாகவும் வடிவமைக்கப்பட்டுள்ளது. மற்ற கிராஸ் ஓவர் மாடல்களில் உள்ள அணைத்து அம்சமும் இதிலும் உள்ளது. பெரிய முகப்பு கிரில், LED முகப்பு விளக்குகள் பிளாஸ்டிக் கிளடிங்குகள் ஆகியவை கொடுக்கப்பட்டுள்ளது. இதன் டேஷ் போர்டு முழுபவதும் புதுமையாக வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும் 6.75 இன்ச் கொண்ட டச் ஸ்க்ரீன் இன்போடைன்மெண்ட் சிஸ்டமும் கொடுக்கப்பட்டுள்ளது. கோ + மாடல் போலவே இந்த மாடலிலும் மூன்று வரிசை இருக்கை கொடுக்கப்பட்டுள்ளது. 

இந்த மாடலிலும் கோ மற்றும் கோ + மாடலில் உள்ள அதே 1.2 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் தான் பொருத்தப்பட்டுள்ளது. எனினும் இந்த மாடல் 68bhp (6000 rpm) திறன் மற்றும் 104Nm (4000rpm) இழுவைத்திறன் என ஒரு செயல்திறனிலும், 77bhp திறன் மற்றும் 104Nm இழுவைத்திறன் என மற்றொரு செயல்திறனிலும் கிடைக்கும். மேலும் இந்த மாடல் ஐந்து ஸ்பீட் கொண்ட மேனுவல் டிரான்ஸ்மிஷன் மற்றும் CVT டிரான்ஸ்மிஷன் ஆப்ஷன்களில் கிடைக்கும். ஆனால் இந்த மாடல் இந்தியாவில் எப்போது வெளியிடப்படும் என்பது பற்றி எந்த ஒரு தகவலும் இல்லை.

மௌவலின் ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.