ரேஞ் ரோவர் எவோக் கன்வெர்டிபில் மாடலின் அதிகாரப்பூர்வ படங்கள்

உலகின் முதல் கன்வெர்டிபில் சொகுசு SUV மாடலான ரேஞ் ரோவர் எவோக் கன்வெர்டிபில் மாடலின் கான்செப்ட் 2012 ஆம் ஆண்டு ஜெனிவா மோட்டார் கண்காட்சியில் அறிமுகப்படுத்தியது லேண்ட் ரோவர் நிறுவனம். இதன் அதிகாரப்பூர்வ பாடங்களை தற்போது லேண்ட் ரோவர் நிறுவனம் வெளியிட்டுள்ளது.  இந்த மாடல் தான் மிக நீளமான மேற்கூரை கொண்ட  கன்வெர்டிபில் மாடல் என்பது குறிப்பிடத்தக்கது.

முழுவதுமாக தானியங்கி தன்மை கொண்ட கன்வெர்டிபில் மேற்கூரை 21 வினாடிகளுக்குள் வெளியே வந்து மூடிய காராக மாற்றி விடும். மேலும் இந்த கன்வெர்டிபில் மேற்கூரை 48 Kmph வேகத்தில் இயங்கும்.

இந்த மாடல் சிறந்த ஆப் ரோடு  தன்மை கொண்டதாக இருக்கும் எனவும் லேன்ட் ரோவர் நிறுவனம் தெரிவித்துள்ளது. என்ஜினில் எந்த மாற்றமும் இருக்காது என்றே எதிர்பார்க்கப்படுகிறது. அதே 2.0 லிட்டர் டீசல் மற்றும் பெட்ரோல் என்ஜினிலேயே கிடைக்கும்.

இந்த மாடலின் விற்பனை 2016 ஆம் ஆண்டு தொடங்கப்படும் எனவும் லேண்ட் ரோவர் நிறுவனம் அறிவித்துள்ளது.

மௌவலின் ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.