நவம்பரில் அறிமுகம் செய்யப்படும் ரேஞ் ரோவர் எவோக் கன்வெர்டிபில்

உலகின் முதல் கன்வெர்டிபில் சொகுசு SUV மாடலான ரேஞ் ரோவர் எவோக் கன்வெர்டிபில் மாடலை லாஸ் ஏஞ்சல்ஸ் வாகன கண்காட்சியில் அறிமுகம் செய்ய இருக்கிறது லேன்ட் ரோவர் நிறுவனம். இந்த மாடலின் சோதனை காணொளியை மட்டும் தான் இதுவரை லேன்ட் ரோவர் நிறுவனம் வெளியிட்டுள்ளது. மேலும் இந்த மாடலின் விற்பனை 2016 ஆம் ஆண்டு தொடங்கப்படும் எனவும்  அறிவித்துள்ளது.

இந்த மாடல் சிறந்த ஆப் ரோடு  தன்மை கொண்டதாக இருக்கும் எனவும் லேன்ட் ரோவர் நிறுவனம் தெரிவித்துள்ளது. என்ஜினில் எந்த மாற்றமும் இருக்காது என்றே எதிர்பார்க்கப்படுகிறது. அதே 2.0 லிட்டர் டீசல் மற்றும் பெட்ரோல் என்ஜினிலேயே கிடைக்கும்.

இந்த மாடல் இந்தியாவில் எப்போது வெளியிடப்படும் என்று எந்த ஒரு தகவலும் இல்லை.

மௌவலின் ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.