வெளியிடப்பட்டது ரேஞ் ரோவர் எவோக் லேன்ட்மார்க் சிறப்பு பதிப்பு மாடல்

லேன்ட் ரோவர் நிறுவனம் ரேஞ் ரோவர் எவோக் லேன்ட்மார்க் சிறப்பு பதிப்பு மாடலை இந்தியாவில் வெளியிடப்பட்டு ஆறு ஆண்டுகள் ஆனதை கொண்டாடும் விதமாக ரூ 50.20 லட்சம் ஷோரூம் விலையில் வெளியிட்டுள்ளது. இந்த மாடல் SE வேரியன்ட்டின் அடிப்படையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த மாடலில் நிறைய ஒப்பனை மாற்றங்கள் மட்டுமே கொடுக்கப்பட்டுள்ளது. 

எவோக் லேன்ட்மார்க் சிறப்பு பதிப்பு  மாடலில் டைனமிக் பாடி கிட், கார் வண்ணத்திலான பாடி கிளாடிங், க்ரே வண்ண கிரில், பென்டெர் வென்ட், புதிய க்ரே வண்ண மேற்க்கூரை மற்றும் புதிய 18 இன்ச் அலாய் வீல் ஆகியவை இந்த மாடலில் கொடுக்கப்பட்டுள்ளது. மற்றபடி உட்புறம் மற்றும் உபகரணங்களில் அதிக மாற்றம் இல்லை. 

இந்த மாடலின் எஞ்சினில் எந்த மாற்றமும் இல்லை. அதே 2.0 இன்ஜெனியம் டீசல் எஞ்சின் தான் பொருத்தப்பட்டுள்ளது. இது 180 bhp திறனையும் 430 Nm இழுவைதிறனையும் வழங்கும். மேலும் இந்த மாடலில் ஆல் வீல் டிரைவ் சிஸ்டம் மற்றும் 9 வேக ஆட்டோமேடிக் கியர் பாக்ஸ் ஆகியவை பொருத்தப்பட்டுள்ளது. இந்த மாடல் அதிகபட்சமாக மணிக்கு 195 கிலோமீட்டர் வேகம் வரை செல்லும் மற்றும் 100 கிலோமீட்டர் வேகத்தை 8.5 வினாடிகளில் கடக்கும் வல்லமை கொண்டது.

மௌவலின் ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.