இந்த மாத இறுதியில் இந்தியாவில் வெளியிடப்படும் ரேஞ் ரோவர் எவோக் கன்வெர்டிபில்

லேன்ட் ரோவர் நிறுவனம் மிக நீண்ட காலமாக எதிர்பார்க்கப்பட்ட ரேஞ் ரோவர் எவோக் கன்வெர்டிபில் மாடல் மார்ச் 27 ஆம் தேதி வெளியிடப்படும் என தெரிவித்துள்ளது. ரேஞ் ரோவர் எவோக் கன்வெர்டிபில் மாடலின் கான்செப்ட் முதலில் 2012 ஆம் ஆண்டு ஜெனிவா மோட்டார் கண்காட்சியில் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த மாடல் தான் முதல் கன்வெர்டிபில் சொகுசு SUV என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த மாடல் தான் மிக நீளமான மேற்கூரை கொண்ட கன்வெர்டிபில் மாடல் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த மாடலும் மற்ற எவோக் மாடல் போலவே அதே,  2.0 இன்ஜெனியம் டீசல் எஞ்சின் தான் பொருத்தப்பட்டுள்ளது. இது 237 bhp திறனையும் 340 Nm இழுவைதிறனையும் வழங்கும். மேலும் இந்த மாடலில் ஆல் வீல் டிரைவ் சிஸ்டம் மற்றும் 9 வேக ஆட்டோமேடிக் கியர் பாக்ஸ் ஆகியவை பொருத்தப்பட்டுள்ளது. இந்த மாடல் அதிகபட்சமாக மணிக்கு 217 கிலோமீட்டர் வேகம் வரை செல்லும் மற்றும் 100 கிலோமீட்டர் வேகத்தை 8.1 வினாடிகளில் கடக்கும் வல்லமை கொண்டது.

ரேஞ் ரோவர் எவோக் கன்வெர்டிபில் மாடல் இந்தியாவில் டாப் வேரியன்ட்டான HSE Dynamic வேரியன்ட்டில் மட்டுமே கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. முழுவதுமாக தானியங்கி தன்மை கொண்ட கன்வெர்டிபில் மேற்கூரையை 20 வினாடிகளுக்குள் 48 Kmph வேகத்தில் செல்லும் போதும் திறந்து மூட முடியும். மேலும் விவரங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள மௌவலுடன் இணைந்திருங்கள். 

மௌவலின் ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.