நவம்பர் மாதம் இந்தியாவில் வெளியிடப்படும் லேன்ட் ரோவர் ரேஞ் ரோவர் வெலர்

டாடா நிறுவனத்தின் கீழ் இயங்கும் லேண்ட் ரோவர் நிறுவனம் ரேஞ் ரோவர் வெலர் எனும் புதிய சொகுசு SUV மாடலை நவம்பர் மாதம் இந்தியாவில் வெளியிட உள்ளது. இந்த மாடல் முதலில் ஜெனிவா மோட்டார் கண்காட்சியில் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த மாடல் ரேஞ் ரோவர் எவோக் மற்றும் ரேஞ் ரோவர் ஸ்போர்ட் மாடல்களுக்கு இடையில் நிலைநிறுத்தப்படும்.

இந்த மாடல் ரேஞ் ரோவர் பிராண்டில் வெளியிடப்படும் மூன்றாவது மாடல் ஆகும். இந்த மாடல் ரேஞ் ரோவர் எவோக் மாடலை விட பெரியதாக இருக்கும். இந்த மாடல் ஆடி Q7, வோல்வோ XC90 மற்றும் மெர்சிடிஸ் பென்ஸ் GLS  போன்ற மாடல்களுக்கு போட்டியாக இருக்கும். 

இந்த மாடல் ஆறு வித என்ஜின் ஆப்ஷன்களில் கிடைக்கும். மேலும் இந்தியாவில் இந்த மாடல் 2.0 லிட்டர் இன்ஜெனியம் டீசல் என்ஜின் மற்றும் 3.0 லிட்டர் டீசல் என்ஜினில் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இந்த மாடல் நேவிகேஷன் உடன் கூடிய 10 இன்ச் டச் ஸ்க்ரீன் சிஸ்டம், எலெக்ட்ரானிக் அடஜஸ்ட் இருக்கை என    ஏராளமான  சொகுசு உபகரணங்களுடன் வெளியிடப்படும்.

மௌவலின் ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.