இரட்டை வண்ணத்தில் வெளியிடப்பட்ட மேம்படுத்தப்பட்ட டொயோடா - எடியோஸ் லிவா

பண்டிகை காலத்தை முன்னிட்டு டொயோடா கிர்லோஸ்கர் நிறுவனம் புதிய மேம்படுத்தப்பட்ட இரட்டை வண்ணத்திலான எடியோஸ் லிவா மாடலை வெளியிட்டுள்ளது. மேலும் இந்த மாடலில் புதிய டைமண்ட் கட் அலாய், புதிய வண்ணத்திலான உட்புறம், கருப்பு வண்ணத்திலான பக்கவாட்டு கண்ணாடி, மற்றும் ப்ளுடூத் உடன் கூடிய புதிய மியூசிக் சிஸ்டம் ஆகியவை கொடுக்கப்பட்டுள்ளது.

இதன் பெட்ரோல் மாடல் ரூபாய் 5.76 லட்சம் மற்றும் டீசல் மாடல் ரூபாய் 6.79 லட்சம் டெல்லி ஷோரூம் ஆரம்ப விலையில் கிடைக்கும். 

என்ஜினில் எந்த மாற்றமும் இல்லை அதே  1.2 லிட்டர் பெட்ரோல்  என்ஜின் மற்றும்  1.4 லிட்டர் டீசல்  என்ஜினில் கிடைக்கிறது. இதன்  பெட்ரோல் என்ஜின்  1197CC கொள்ளளவும் மற்றும் டீசல் என்ஜின் 1364CC கொள்ளளவும் கொண்டது.

இதன் 1.2 லிட்டர் பெட்ரோல் என்ஜின் 80 bhp (5600 rpm) திறனும் 104Nm (3100rpm) டார்க் எனும்  இழுவைதிறனும் கொண்டது.இதன் பெட்ரோல் என்ஜின் மாடல் 17.71 Kmpl மைலேஜ்  தரும் என ARAI சான்றளித்துள்ளது.  

டீசல் என்ஜினில் மாடல் 68 bhp (3800 rpm) திறனும் 170Nm (1800-2400rpm) டார்க் எனும்  இழுவைதிறனும் கொண்டது. இதன் டீசல்  என்ஜின் மாடல்  23.59 Kmpl  மைலேஜ் தரும் என ARAI சான்றளித்துள்ளது.

இந்த  காரின் பெட்ரோல்  என்ஜின் மாடல் 100 கிலோமீட்டர் வேகத்தை 14 முதல் 16 வினாடிகளிலும் டீசல் என்ஜின் மாடல் 16 முதல் 17 வினாடிகளிலும் கடக்கும் வல்லமை கொண்டது  மற்றும்  இதன்  பெட்ரோல் என்ஜின் மாடல்  அதிக பட்சமாக மணிக்கு  140 முதல் 150 கிலோமீட்டர்  வேகம்  வரையும் மற்றும் டீசல் என்ஜின் மாடல் 155 முதல் 160 கிலோமீட்டர்  வேகம்  வரையும் செல்லும்

மௌவலின் ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.