ரெனால்ட் - டஸ்டர் எக்ஸ்ப்ளோர் எடிசன் மாடல் வெளியிடப்பட்டது

ரெனால்ட் - டஸ்டரின் லிமிடெட் எடிசன் மாடலான எக்ஸ்ப்ளோர் எடிசன் மாடல் இன்று  வெளியிடப்பட்டது. ஏற்கனவே கம்பீரமான தோற்றமுடைய டஸ்டரில் சில ஒப்பனை மாற்றங்களை செய்து மேலும் கம்பீரமான மற்றும் அழகான மாடலாக மாற்றியுள்ளது ரெனால்ட் நிறுவனம்.

வெளிப்புறத்தில் புதிய முன்புற கிரில், ஸ்கிட் ப்ளேட், முகப்பு விளக்கு, கருப்பு வண்ண இரட்டை கோடு போன்ற ஸ்டிக்கர், பக்கவாட்டு ஸ்டிக்கர் மற்றும் புதிய ஆரஞ்சு வண்ண கலவையிலான அலாய் வீல் ஆகியவை மாற்றப்பட்டுள்ளது. 

உட்புறத்தில் உட்புற கைப்பிடி, குளிரூட்டி வழி. இன்ஸ்ட்ருமென்ட் க்ளஸ்டர் மற்றும் இருக்கை என  அணைத்து இடங்களிலும் ஆரஞ்சு வண்ண கலவை கொடுக்கப்பட்டுள்ளது. 

எனிஜினில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. அதே 1.5 லிட்டர் டீசல் என்ஜினில் தான் கிடைக்கும். இந்த எக்ஸ்ப்ளோர் எடிசன் மாடல் 85 bhp  மற்றும்  110 bhp கொண்ட இரண்டு RxL வேரியண்டில் மட்டும் கிடைக்கும். 

மௌவலின் ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.