ரெனால்ட் - க்விட்

2014 ஆம் ஆண்டு டெல்லியில் நடந்த ஆட்டோ கண்காட்சியில் ரெனால்ட்  நிறுவனத்தால் க்விட் கான்செப்ட் மாடல் கட்சிக்கு வைக்கப்பட்டிருந்தது அதன் பிறகு சில நாட்களுக்கு முன்பு இதன் தயாரிப்பு நிலை மாடலையும் வெளியிட்டது.

என்ட்ரி லெவல் மாடல் என்று சொல்லப்பட்டாலும் இது ஒரு சிறிய SUV  மாடல் போல் தோற்றமளிக்கிறது. முன்புற கிரில், பனி விளக்குகள், பின்புற விளக்குகள் என அனைத்துமே சிறப்பான தோற்றத்தை தருகிறது. மேலும் இது ஒரு சிறிய டஸ்டர் போல தோற்றத்தை தருகிறது. 

உட்புறத்திலும் விலை உயர்ந்த கார்களில் உள்ளது போல வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும் டச் ஸ்க்ரீன் ஆடியோ சிஸ்டமும் கொடுக்கப்பட்டுள்ளது. என்ஜின் விவரங்கள் ஏதும் வெளியிடப்படவில்லை

மேலும் இந்த மாடல் 3 லட்சம் முதல் 5 லட்சம் வரையிலான விலையில் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மௌவலின் ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.