இன்று வெளியிடப்படும் ரெனோ கேப்டர் கிராஸ் ஓவர்

ரெனோ நிறுவனம் நீண்ட நாட்களாக எதிர்பார்க்கப்பட்ட கேப்டர் கிராஸ் ஓவர் மாடலை இன்று இந்தியாவில் வெளியிட இருக்கிறது. இதன் முன்பதிவை அதிகாரப்பூர்வமாக ஏற்கனவே அனைத்து ஷோரூம்களிலும் நடைபெற்று வருகிறது. ரூ 25,000 முன்பணமாக செலுத்தி இந்த மாடலை நீங்கள் முன்பதிவு செய்து கொள்ளலாம்.

இந்த மாடல் ஐரோப்பாவில் விற்பனையில் இருக்கும் கேப்டர் மாடல் கிடையாது. அந்த மடலின் வடிவத்தை மட்டும் அப்படியே பயன் படுத்தி டஸ்டர் மாடலின் அடிப்படையில் இந்தியா போன்ற நாடுகளுக்கென பிரத்தியேகமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த மாடலில் டஸ்டர் மாடலில் உள்ள அதே 1.5 லிட்டர் டீசல் மற்றும் பெட்ரோல் என்ஜின் தான் பொருத்தப்பட்டிருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

இந்த மாடலில் 17 இன்ச் அலாய் வீல், ஆட்டோமேட்டிக் கிளைமேட் கண்ட்ரோல், 7 இன்ச் இன்போடைன்மெண்ட் சிஸ்டம், LED முகப்பு மற்றும் பின்புற விளக்குகள் என ஏராளமான வசதிகள் கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த மாடலுக்கு பல கஸ்டமைசேஷன் வசதிகளையும் ரெனோ நிறுவனம் வழங்குகிறது. இந்த மாடல் 4333 மிமீ நீளமும், 1813 மிமீ அகலமும், 1613 மிமீ உயரமும் மற்றும் 204 மிமீ தரை இடைவெளியும் கொண்டது. 387 லிட்டர் கொள்ளளவு பொருள்கள் வைக்க(Boot Space) இட வசதி கொண்டது.

இந்த மாடல் டஸ்டர் மாடலுக்கு மேலாக நிலைநிறுத்தப்படும். மேலும் இந்த மாடல் ஹூண்டாய் க்ரெட்டா, மகிந்திரா XUV500, டாடா ஹெக்சா போன்ற மாடல்களுக்கு நேரடி போட்டியாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மௌவலின் ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.