ரெனோ டஸ்ட்டர் மாடலின் விலை அதிரடி குறைப்பு

ரெனோ நிறுவனம் டஸ்ட்டர் மாடலின் விலையை ரூ 1 லட்சம் வரை அதிரடியாக குறைத்துள்ளது. டஸ்ட்டர் மாடலுக்கு தேவையான உதிரி பாகங்கள் அதிகமாக தற்போது உள்நாட்டிலேயே பெறுவதால் இந்த விலை குறைக்கப்பட்டுள்ளது என ரெனோ நிறுவனம் தெரிவித்துள்ளது. டஸ்ட்டர் மாடலின் டாப் வேரியன்ட்டான RXZ AWD மாடல் அதிகபட்சமாக ரூ 1 லட்சம் வரை குறைக்கப்பட்டுள்ளது. இந்த புதிய விலை மார்ச் ஒன்றாம் தேதி முதல் அமல்படுத்தப்பட்டுள்ளது.

ரெனோ டஸ்ட்டர் மாடலின் புதிய ஷோரூம் விலை விவரம்:

 • Duster Petrol RXE - Rs 795000
 • Duster Petrol RXL - Rs 884000
 • Duster Petrol RxS CVT Petrol     - Rs 995000
 • Duster Diesel 85PS Standard - Rs 895000
 • Duster Diesel 85PS RXE     - Rs 914000
 • Duster Diesel 85PS RXS     - Rs 995000
 • Duster Diesel 85PS RXZ - Rs 1094000
 • Duster Diesel 110PS RXZ - Rs 1184000
 • Duster Diesel 110PS RXZ AMT - Rs 1238000
 • Duster Diesel 110PS RXZ AWD - Rs 1284000
 • Duster Diesel 85PS RXS Sandstorm Edition - Rs 1027300
 • Duster Diesel 110PS RXS Sandstorm Edition - Rs 1117300

இந்த மாடல் 4 சிலிண்டர் மற்றும் 16 வால்வ் கொண்ட 1.5 லிட்டர் டீசல் என்ஜினில் இரண்டு திறன்களிலும் மற்றும் 4 சிலிண்டர் மற்றும் 16 வால்வ் கொண்ட 1.6 லிட்டர் பெட்ரோல் என்ஜினிலும் கிடைக்கும். இதன்  டீசல் என்ஜினின் குறைந்த திறன் கொண்ட மாடல்   85 bhp (3750 rpm) திறனும் 200Nm (1750rpm) டார்க் எனும்  இழுவைதிறனும் கொண்டது. இதன்  டீசல் என்ஜினின் அதிக  திறன் கொண்ட மற்றொரு மாடல்  110 bhp (5750 rpm) திறனும் 245Nm (1750rpm) டார்க் எனும்  இழுவைதிறனும் கொண்டது. இதன்  பெட்ரோல் என்ஜின்  மாடல்   104 bhp (5750 rpm) திறனும் 148Nm (3750rpm) டார்க் எனும்  இழுவைதிறனும் கொண்டது. 

மௌவலின் ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.