குளோபல் NCAP சிதைவு சோதனையில் 0 ஸ்டார் தர மதிப்பீட்டை பெற்றது ரெனோ டஸ்ட்டர்

குளோபல் NCAP சிதைவு  சோதனை மையம் இந்திய கார் மாடல்களை அடிக்கடி சோதனை செய்து வருகிறது. அதன்படி தற்போது ரெனோ டஸ்ட்டர் மாடலை சோதனை செய்தது ஆனால் அதிர்ச்சி அழிக்கும் விதமாக ரெனோ டஸ்ட்டர் மாடல் குளோபல் NCAP சிதைவு சோதனையில் 0 ஸ்டார் தர மதிப்பீட்டை மட்டுமே பெற்றது.

இந்த சோதனையில் மணிக்கு 64 கிலோமீட்டர் வேகத்தில் இந்த மாடல் முன்புறமாக தடுப்பின் மீது மோதப்பட்டது. இதில் காற்றுப்பை இல்லாத மாடல் பெரியவர்களுக்கான பாதுகாப்பில் 0 ஸ்டார் தர மதிப்பீட்டையும் குழந்தைகளுக்கான பாதுகாப்பில்  2 ஸ்டார் தர மதிப்பீட்டையும் பெற்றுள்ளது. மற்றும் காற்றுப்பை உள்ள மாடல் பெரியவர்களுக்கான பாதுகாப்பில் 3 ஸ்டார் தர மதிப்பீட்டையும் குழந்தைகளுக்கான பாதுகாப்பில்  2 ஸ்டார் தர மதிப்பீட்டையும் மட்டுமே பெற்றது. 

ஆனால் லத்தின் அமெரிக்காவில் விற்பனை செய்யப்படும் காற்றுப்பை கொண்ட அதே மாடல் 4 ஸ்டார் தர மதிப்பீட்டை பெற்றது. அதன் பின் நீண்ட விசாரணைக்கு பிறகு ரெனோ நிறுவனம் இந்திய டஸ்ட்டர் மாடல்களில் சிறிய அளவிலான காற்றுப்பைகளை பயன்படுத்துகிறது என்ற அதிர்ச்சி தெரியவந்தது.

மௌவலின் ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.