உபயோகிக்கப்பட்ட பழைய கார் விற்பனையில் நுழைந்தது ரெனால்ட்

ரெனால்ட் நிறுவனம் உபயோகிக்கப்பட்ட பழைய கார் விற்பனையில் நுழைந்தது. இதற்காக ரெனால்ட் செலெக்சன் எனும் பிரத்தியேக ஷோ ரூமை பெங்களுருவில் தொடங்கியுள்ளது.  இந்த ஷோ ரூம் மூலம் அணைத்து வித பிராண்ட் கார்களையும் விற்கவும் வாங்கவும் முடியும். 

இந்த ஷோ ரூம் 21,000 சதுர அடி பரப்பளவு கொண்டது. மேலும் இந்த ஷோ ரூமில் 100 கார் வரை நிறுத்தி வைக்க முடியும். இந்த ஷோ ரூமில் ரெனால்ட் கார் மட்டும் அல்லாமல் அனைத்து பிராண்ட் கார்களுக்கும்  கார் சான்றிதல், காப்பீடு, வாரண்ட்டி மற்றும் ரோடு சைடு அசிஸ்டன்ஸ் என அனைத்து வசதிகளும் வழங்கப்படும். மேலும் எக்சேஞ் செய்ய விரும்புவோரும் இந்த ஷோ ரூம் மூலம் மாற்றிக்கொள்ள முடியும். 

ரெனால்ட்  நிறுவனம், இத்தகைய ரெனால்ட் செலெக்சன்  ஷோரூம்களை விரைவில் ஜெய்பூர் , நாக்பூர் மற்றும் சண்டிகர் ஆகிய நகரங்களில் திறக்க உள்ளது. மேலும் அடுத்த வருட இறுதிக்குள் 240 ஷோ ரூம்களை திறக்க திட்டமிட்டுள்ளது.. 

மௌவலின் ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.