பிரேசிலில் வெளிப்படுத்தப்பட்டது ரெனோ க்விட் 1.0 லிட்டர், கேப்டர் மற்றும் அடுத்த தலைமுறை கோலியாஸ்

ரெனோ நிறுவனம்  பிரேசிலில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ரெனோ க்விட் 1.0 லிட்டர், கேப்டர் மற்றும் அடுத்த தலைமுறை கோலியாஸ் மாடல்களை வெளிப்படுத்தியது. இந்த அணைத்து மாடல்களுமே விரைவில் இந்தியாவில் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் க்விட் 1.0 லிட்டர் மாடல் 2016 ஆம் ஆண்டு டெல்லி வாகன கண்காட்சியில் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. இந்த க்விட் 1.0 லிட்டர் மாடல் தீபாவளி பண்டிகை காலத்தில் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கேப்டர் SUV மாடல் ஐரோப்பாவில் விற்பனையில் இருக்கும் கேப்டர் மாடல் கிடையாது.  அந்த மடலின் வடிவத்தை மட்டும் அப்படியே பயன் படுத்தி டஸ்டர் மாடலின் அடிப்படையில் இந்தியா  போன்ற நாடுகளுக்கென  பிரத்தியேகமாக  வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த மாடலில் டஸ்டர் மாடலில் உள்ள அதே என்ஜின் பயன்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.இந்த மாடல் 4333 மிமீ நீளமும், 1813 மிமீ அகலமும், 1613 மிமீ உயரமும் மற்றும் 204 மிமீ தரை இடைவெளியும் கொண்டது. 387 லிட்டர் கொள்ளளவு பொருள்கள் வைக்க(Boot  Space ) இட வசதி கொண்டது. 

இந்த மாடல் டஸ்டர் மாடலுக்கு  மேலாக நிலைநிறுத்தப்படும்.  மேலும் இந்த மாடல்  மகிந்திரா XUV500, டாடா ஹெக்சா போன்ற  மாடல்களுக்கு போட்டியாக இருக்கும். இத்துடன் இரண்டாம் தலைமுறை கோலியாஸ் மாடலும் வெளிப்படுத்தப்பட்டது. 

மௌவலின் ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.