ரூ.3.83 லட்சம் ஆரம்ப விலையில் வெளியிடப்பட்டது ரெனோ க்விட் 1.0

ரெனோ நிறுவனம் 1.0 லிட்டர் என்ஜின் கொண்ட க்விட் மாடலை இன்று இந்தியாவில் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டது. RXT  வேரியன்ட் ரூ.3.83 லட்சம் டெல்லி ஷோரூம் விலையிலும்  RXT(O)  வேரியன்ட் ரூ.3.96 லட்சம் டெல்லி ஷோரூம் விலையிலும்  வெளியிடப்பட்டுள்ளது. இது 0.8 லிட்டர் என்ஜின் கொண்ட  க்விட் மாடலை விட ரூ.22,000 அதிகம் விலை கொண்டது.

இந்த மாடலில் 999cc கொள்ளளவு கொண்ட 3 சிலிண்டர் 1.0 லிட்டர் என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இது 67 Bhp  திறனையும் 91 Nm  இழுவைத்திறனையும் வழங்கும். இந்த மாடல் லிட்டருக்கு 23.01 கிலோ மீட்டர் மைலேஜ் தரும் என ARAI  சான்றளித்துள்ளது.

இந்த 1.0 லிட்டர் மாடலின் உட்புற மற்றும் வெளிப்புற தோற்றத்தில் மாற்றங்கள் இல்லை என்ஜின் மட்டும் தான் மாற்றப்பட்டுள்ளது. இந்த மாடலில் 5 ஸ்பீட் கொண்ட மேனுவல் கியர் பாக்ஸ் பொருத்தப்பட்டுள்ளது. இந்த மாடல் AMT கியர்  பாக்ஸ் உடனும் விரைவில் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே இமாலய விற்பனையை பதிவு செய்து வரும் க்விட் மாடலுக்கு இந்த 1.0 லிட்டர் என்ஜின் மாடல் கூடுதல் பலமாக அமையும்.

மௌவலின் ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.