ஆகஸ்ட் 22 ஆம் தேதி வெளியிடப்படும் 1.0 லிட்டர் என்ஜின் கொண்ட ரெனோ க்விட்

ரெனோ நிறுவனத்தின்  டீலர்ஷீப்புகளில் 1.0 லிட்டர் என்ஜின் கொண்ட க்விட் மாடலுக்கான முன்பதிவு சில நாட்களுக்கு முன்பு தொடங்கப்பட்ட நிலையில் தற்போது ரெனோ நிறுவனம் 1.0 லிட்டர் என்ஜின் கொண்ட க்விட் மாடல்  ஆகஸ்ட் 22 ஆம் தேதி வெளியிடப்படும் என அறிவித்துள்ளது. SUV போன்ற கம்பீரமான தோற்றம், சிறந்த உட்புற வடிவமைப்பு மற்றும்  குறைந்த விலை ஆகிய காரணங்களால் இந்த மாடல் மிகப்பெரும் வெற்றியை பெற்றது.

இந்த மாடலில் 999cc கொள்ளளவு கொண்ட 3 சிலிண்டர் 1.0 லிட்டர் என்ஜின் பொருத்தப்பட்டிருக்கும். இது 67 Bhp  திறனையும் 91 Nm  இழுவைத்திறனையும் வழங்கும். இந்த மாடல் லிட்டருக்கு 23.01 கிலோ மீட்டர் மைலேஜ் தரும். மேலும் இந்த 1.0 லிட்டர் என்ஜின் RXT  மற்றும் RXT(O) வேரியண்ட்டுகளில் மட்டுமே கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

இந்த 1.0 லிட்டர் மாடலின் தோற்றத்தில் மாற்றங்கள் இருக்காது. மேலும் இந்த மாடல் AMT  கியர் பாக்ஸ் உடன் வெளியிடப்படும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. இந்த AMT கியர்  பாக்ஸ் கொண்ட மாடலில் எல்லா மாடலிலும் இருப்பது போன்று கியர் லிவர் கொடுக்கப்படாமல் டேஸ் போர்டில் டிரைவ் , நியுட்ரல் மற்றும் ரிவேர்ஸ் எனும் மூன்று ஆப்சன்கள் மட்டுமே கொடுக்கப்பட்டிருக்கும்.  

மௌவலின் ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.