ரூ. 4.3 லட்சம் விலையில் வெளியிடப்பட்டது ரெனோ க்விட் கிளைம்பர்

ரெனோ நிறுவனம் க்விட் கிளைம்பர் மாடலை ரூ. 4.3 லட்சம் டெல்லி ஷோரூம் ஆரம்ப விலையில் வெளியிட்டுள்ளது. இந்த மாடல் 1.0 லிட்டர் எஞ்சின் கொண்ட RXT(O) வேரியண்டில் மட்டும் வெளியிடப்பட்டுள்ளது. இதன் மேனுவல் மாடல் ரூ. 4.3 லட்சம் விலையிலும் ஆட்டோமேட்டிக் மாடல் ரூ. 4.6 லட்சம் விலையிலும் கிடைக்கும். 2016 ஆம் ஆண்டு டெல்லி வாகன கண்காட்சியில் காட்சிப்படுத்தப்பட்ட க்விட் கிளைம்பர் கான்செப்ட் மாடலின் தயாரிப்பு நிலை மாடல் இது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த மாடலில் வெளிப்புறத்தில் புதிய பம்பர், புதிய ஆரஞ்சு வண்ண ஸ்கிட் பிளேட், ஆரஞ்சு வண்ண பக்கவாட்டு கண்ணாடி, ஆரஞ்சு வண்ண ரூப் ரயில், புதிய அலாய் வீல் ஆகியவையும் உட்புறத்தில் முழுவதிலும் ஆரஞ்சு வண்ணத்தில் சிறு சிறு பகுதியில் கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் ஹெட் ரெஸ்டில் கிளைம்பர் என எழுதப்பட்டுள்ளது.

இந்த மாடலில் 999cc கொள்ளளவு கொண்ட 3 சிலிண்டர் 1.0 லிட்டர் என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இது 67 Bhp  திறனையும் 91 Nm  இழுவைத்திறனையும் வழங்கும். இந்த மாடல் லிட்டருக்கு 23.01 கிலோ மீட்டர் மைலேஜ் தரும் என ARAI  சான்றளித்துள்ளது.

மௌவலின் ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.