விற்பனையில் 1,30,000 எண்ணிக்கையை கடந்தது ரெனோ க்விட்

ரெனோ க்விட் மாடல் விற்பனையில் 1,30,000  எண்ணிக்கையை கடந்து சாதனை படைத்துள்ளது. இந்த மாடல் செப்டம்பர் மாதம் 2015 ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது. வெளியிடப்பட்டு 17 மாதங்களில் க்விட் மாடல் இந்த சாதனையை நிகழ்த்தி உள்ளது.  இந்த மாடல் 0.8 மற்றும் 1.0 லிட்டர் என்ஜின்களில் கிடைக்கிறது.

இந்த மாடலில் உள்ள  999cc கொள்ளளவு கொண்ட 3 சிலிண்டர் 1.0 லிட்டர் என்ஜின் 67 Bhp  திறனையும் 91 Nm  இழுவைத்திறனையும் வழங்கும். இந்த மாடல் லிட்டருக்கு 24.04 கிலோ மீட்டர் மைலேஜ் தரும் என ARAI  சான்றளித்துள்ளது. 

அதேபோல் 799cc கொள்ளளவு கொண்ட 3 சிலிண்டர் 0.8 லிட்டர் என்ஜின் 54 Bhp  திறனையும் 72 Nm  இழுவைத்திறனையும் வழங்கும். இந்த மாடல் லிட்டருக்கு 25.17 கிலோ மீட்டர் மைலேஜ் தரும் என ARAI  சான்றளித்துள்ளது. மேலும் இந்த மாடல் மேனுவல் மற்றும் AMT கியர் பாக்சில் கிடைக்கும். இந்த AMT கியர்  பாக்ஸ் கொண்ட மாடலில் எல்லா மாடலிலும் இருப்பது போன்று கியர் லிவர் கொடுக்கப்படாமல் டேஸ் போர்டில் டிரைவ் , நியுட்ரல் மற்றும் ரிவேர்ஸ் எனும் மூன்று ஆப்சன்கள் கொண்ட ரோட்டரி கியர் நாப்  மட்டுமே கொடுக்கப்பட்டுள்ளது. 

மௌவலின் ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.