புதிய பெட்ரோல் என்ஜினுடன் வெளியிடப்பட்டது ரெனோ டஸ்ட்டர்

ரெனோ நிறுவனம் புதிய பெட்ரோல் என்ஜினுடனும் மேலும் கூடுதலாக ஆட்டோமேட்டிக் கியர் பாக்ஸ் உடனும் டஸ்ட்டர் மாடலை வெளியிட்டுள்ளது. இந்த மாடல் ரூ 8.49 லட்சம் டெல்லி ஷோரூம் ஆரம்ப விலையில் மூன்று வேரியண்ட்டுகளில் வெளியிடப்பட்டுள்ளது. 

வேரியன்ட் வாரியாக டெல்லி ஷோரூம் விலை விவரம்:
RXE MT: ரூ 8.49 லட்சம்
RXL MT: ரூ 9.30 லட்சம்
RXS CVT: ரூ 10.32 லட்சம்

இந்த மாடலில் முந்தய 1.6 லிட்டர் பெட்ரோல் எஞ்சினுக்கு பதிலாக புதிய 1.5 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் பொருத்தப்பட்டுள்ளது. இது 106Bhp திறனையும் 142Nm இழுவைத்திறனையும் வழங்கும். இது முந்தய மாடலை விட 2Bhp திறனும் 6Nm இழுவைத்திறனும் அதிகம் ஆகும். இந்த மாடல் ஐந்து ஸ்பீட் மேனுவல் மற்றும் ஆறு ஸ்பீட் கொண்ட X-Tronic CVT கியர் பாக்சிலும் கிடைக்கும்.  மேலும் இதன் மேனுவல் மாடல் 14.19kmpl மைலேஜும் ஆட்டோமேட்டிக் மாடல் 14.99kmpl மைலேஜும் தரும் என ARAI  சான்றளித்துள்ளது.

வடிவமைப்பில் எந்த மாற்றமும் இல்லை. புதிய சிகப்பு வண்ணத்தில் மட்டும் கூடுதலாக இந்த மாடல் வெளியிடப்பட்டுள்ளது. இதன் பெட்ரோல் மாடலில் ஆல் வீல் டிரைவ் சிஸ்டம் கிடையாது என்பது குறிப்பிடத்தக்கது.

மௌவலின் ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.