ரெனோ RBC MPV மாடலின் அதிகாரப்பூர்வ பெயர் ட்ரைபர்

ரெனோ நிறுவனம் RBC எனும் குறியீட்டுப் பெயரில் ஒரு MPV மாடலை சோதனை செய்து வருவது அனைவரும் அறிந்ததே. மேலும் இதன் சோதனை ஒட்டப்படங்கள் அடிக்கடி இணையத்தில் கசிந்தும் குறிப்பிடத்தக்கது. தற்போது இதன் தயாரிப்பு நிலை மாடலின் பெயர் ட்ரைபர் என ரெனோ நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இந்த மாடல் மிகச்சிறந்த இட வசதி கொண்ட மாடலாக இருக்கும் என்பதை மட்டுமே ரெனோ நிறுவனம் அறிவித்துள்ளது, மற்ற விவரங்கள் எதையும் வெளியிடவில்லை.

இந்த மாடல் ஐந்து இருக்கை கொண்ட அதிக இட வசதி கொண்ட MPV மாடலாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இந்த மாடல் லாட்ஜி மாடலுக்கு கீழாக நிலைநிறுத்தப்படும். மேலும் இந்த மாடலில் ப்ரொஜெக்டர் முகப்பு விளக்குகள், நான்கு காற்றுப்பை என ஏராளமான வசதிகள் கொடுக்கப்பட்டிருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இந்த மாடலின் எஞ்சின் தொடர்பான விவரங்கள் ஏதும் வெளியிடப்படவில்லை. எனினும் இந்த மாடல் 1.2 லிட்டர் பெட்ரோல் மற்றும் டீசல் எஞ்சின் தேர்வுகளில் கிடைக்குமே என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், ரெனோ ட்ரைபர் ரூ 5 லட்சம் முதல் ரூ 8 லட்சம் விலையில் வெளியிடப்படும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

மௌவலின் ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.