1.0 லிட்டர் என்ஜின் கொண்ட ரெனோ க்விட் மாடலின் முன்பதிவு தொடங்கப்பட்டது

ரெனோ நிறுவனத்தின் ஒரு சில டீலர்ஷீப்புகளில் 1.0 லிட்டர் என்ஜின் கொண்ட க்விட் மாடலுக்கான முன்பதிவு தொடங்கப்பட்டுள்ளது. SUV போன்ற கம்பீரமான தோற்றம், சிறந்த உட்புற வடிவமைப்பு மற்றும்  குறைந்த விலை ஆகிய காரணங்களால் இந்த மாடல் மிகப்பெரும் வெற்றியை பெற்றது. அதை தொடர்ந்து ரெனோ நிறுவனம் கஷ்டமைஸ் செய்யப்பட்ட இரண்டு விதமான க்விட் மாடல்களையும், 1.0 லிட்டர் என்ஜின் மற்றும் AMT கியர் பாக்ஸ் கொண்ட மாடல்களையும்  2016 டெல்லி வாகன கண்காட்சியில் காட்சிப்படுத்தியது. இதில் க்விட் 1.0 லிட்டர் மாடல் தீபாவளி பண்டிகை காலத்தில் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தற்போது இதன் முன்பதிவு ஒரு சில டீலர்ஷீப்புகளில் மட்டும் ஏற்றுக்கொள்ளப்படுகிறது. 

AMT கியர்  பாக்ஸ் கொண்ட மாடலில் எல்லா மாடலிலும் இருப்பது போன்று கியர் லிவர் கொடுக்கப்படாமல் டேஸ் போர்டில் டிரைவ் , நியுட்ரல் மற்றும் ரிவேர்ஸ் எனும் மூன்று ஆப்சன்கள் மட்டுமே கொடுக்கப்பட்டிருக்கும்.  

2016 டெல்லி வாகன கண்காட்சியில் காட்சியப்படுத்தப்பட்ட ராக் கிளைம்பர் மற்றும் ரேசர் எனும் இரண்டு கஷ்டமைஸ் மாடல்களும் விற்பனைக்கு வெளியிடப்படலாம்  என எதிர்பார்க்கப்படுகிறது.

மௌவலின் ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.