க்விட் AMT மாடலின் டீசர் படங்களை வெளியிட்டது ரெனோ

ரெனோ நிறுவனம் க்விட் AMT  மாடலின் ரோட்டரி கியர் நாப் டீசர் படத்தை வெளியிட்டுள்ளது. இந்த AMT  கியர் பாக்ஸ் 0.8 லிட்டர் மற்றும் 1.0 லிட்டர் என இரண்டு எஞ்சினிலுமே கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த AMT கியர்  பாக்ஸ் கொண்ட மாடலில் எல்லா மாடலிலும் இருப்பது போன்று கியர் லிவர் கொடுக்கப்படாமல் டேஸ் போர்டில் டிரைவ் , நியுட்ரல் மற்றும் ரிவேர்ஸ் எனும் மூன்று ஆப்சன்கள் கொண்ட ரோட்டரி கியர் நாப்  மட்டுமே கொடுக்கப்பட்டிருக்கும் .

இந்த மாடல் தற்போது 0.8 லிட்டர் மற்றும் 1.0 லிட்டர் எஞ்சினில் கிடைக்கிறது. இதன் 0.8 லிட்டர் என்ஜின் 54 bhp (5678 rpm) திறனும் 72Nm (4386rpm) டார்க் எனும்  இழுவைதிறனும் கொண்டது. மற்றும் இதன் 1.0 லிட்டர் எஞ்சின் 67 Bhp  திறனையும் 91 Nm  இழுவைத்திறனையும் வழங்கும். 

இந்த AMT  மாடல் சாதாரண மாடலை விட ரூ. 50,000 வரை அதிக விலை கொண்டதாக இருக்கும். மேலும் மாருதி சுசூகி ஆல்டோ K10 AMT  மாடலுக்கு கடும் போட்டியாக இருக்கும்.

மௌவலின் ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.