50,000 க்கும் மேலான முன்பதிவுகளை பெற்று அசத்திய ரெனால்ட் - க்விட்

SUV போன்ற கம்பீரமான தோற்றம், சிறந்த உட்புற வடிவமைப்பு மற்றும்  குறைந்த விலை ஆகிய காரணங்களால் அறிமுகம் செய்யப்பட்டு ஒரு மாதமே ஆனா நிலையில்  50,000 க்கும் மேலான முன்பதிவுகளை பெற்று சாதனை செய்துள்ளது ரெனால்ட் - க்விட். இந்த மாடல் மிகசிறந்த வெற்றியை பெரும் என்பதில் எந்த மாற்றமும் இல்லை. மாருதி சுசுகி - ஆல்டோ மற்றும் ஹுண்டாய் - இயான் மாடலுக்கு போட்டியாக இந்த மாடல் நிலைநிறுத்தப்பட்டுள்ளது. 

முன்புற கிரில், பனி விளக்குகள், பின்புற விளக்குகள் என அனைத்துமே சிறப்பான தோற்றத்தை தருகிறது. மேலும் இது ஒரு சிறிய டஸ்டர் போல தோற்றத்தை தருகிறது.மேலும் இந்த மாடலில் டச் ஸ்க்ரீன் ஆடியோ சிஸ்டம் கொடுக்கப்பட்டுள்ளது. இது போட்டியாளர்களான ஆல்டோ மற்றும்  இயான் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. உட்புறத்திலும் விலை உயர்ந்த கார்களில் உள்ளது போல வடிவமைக்கப்பட்டுள்ளது.

இந்த மாடலில் 0.8 லிட்டர் 799cc கொள்ளளவு  கொண்ட பெட்ரோல் என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இது 54 bhp திறனையும் மேலும் 25.17 Kmpl மைலேஜும் தரும். இந்த மாடல் தான் இந்தியாவிலேயே அதிக மைலேஜ் தரும் பெட்ரோல் கார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த மாடல் Standard , RXE , RXL மற்றும் RXT என நான்கு வேரியண்டுகளில் கிடைக்கும். மேலும் இந்த மாடல் 180 மில்லி மீட்டர் கிரௌண்ட் கிளியரன்ஸ் கொண்டது.

வேரியன்ட் வாரியாக தொழில்நுட்ப விவரம் ஷோரூம் மற்றும் ஆன் ரோடு விலை ஆகியவற்றை தெரிந்துகொள்ள கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்.

http://www.mowval.com/car-overview.php?car_company=26&car_model=114

மௌவலின் ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.