புதிய தலைமுறை மேக்னே மாடலை வெளிப்படுத்தியது ரெனால்ட்

ரெனால்ட்  நிறுவனம் நான்காம் தலைமுறை மேக்னே மாடலை வெளிப்படுத்தியது. இதன்  முதல் தலைமுறை மாடல் 20 வருடங்களுக்கு முன்பு வெளியிடப்பட்டது குறிப்பிடத்தக்கது. 

நான்காம் தலைமுறை மேக்னே  மாடல் மிகவும் நேர்த்தியாகவும் அழகாகவும் வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும் ரெனால்ட் மாடலில் உள்ள தனித்துவமான வடிவமைப்பு இதிலும் பயன்படுத்தப்பட்டுள்ளது. 

மேலும் தலிஸ்மான் மாடலில் உள்ளது போல் C வடிவிலான LED முகப்புவிளக்கு இதிலும் கொடுக்கப்பட்டுள்ளது. பின்புற விளக்கும் மிக நேர்த்தியாக வடிவமைக்கப்பட்டுள்ளது.  இந்த மாடல்  ஃபிரான்க் ஃபுர்ட் மோட்டார் கண்காட்சியில் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் இந்த காரின் மற்ற தொழில்நுட்ப  விவரங்களை ஃபிரான்க் ஃபுர்ட் மோட்டார் கண்காட்சியில் தெரிந்து கொள்ளலாம். மேலும் விவரங்களை தெரிந்து கொள்ள மௌவளுடன் தொடர்பில் இருங்கள். 

மௌவலின் ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.