ரோல்ஸ் ராயல்ஸ் கன்வெர்டிபில் டான் வெளியிடப்பட்டது

ரோல்ஸ் ராயல்ஸ் கன்வெர்டிபில் டான்  மாடல் இன்று வெளியிடப்பட்டது. இது ரோல்ஸ் ராயல்ஸ் வ்ரைத் மாடலின் மேற்கூரை திறந்து மூடும் வசதி கொண்ட மாடல் ஆகும். இதன் விற்பனை 2016 ஆம் ஆண்டு ஆரம்பத்தில் தொடங்கப்படும்.

இந்த மாடல் பெரும்பாலும் ரோல்ஸ் ராயல்ஸ் வ்ரைத் மாடலை போலவே இருக்கிறது கூடுதலாக மேற்கூரை திறந்து மூடும் வசதி மட்டும் சேர்க்கப்பட்டுள்ளது. 

இந்த மாடலில் 6.6 லிட்டர் டர்போ சார்ஜ் V 12 எஞ்சின் பொருத்தப்பட்டுள்ளது. இது 624 bhp திறனையும் 800 Nm இழுவைதிறனையும் வழங்கும். மேலும் இந்த மாடல் தோராயமாக 5 கோடி விலையில் வெளியிடப்படும் என எதிர்பார்கப்படுகிறது.

மௌவலின் ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.