ரூ. 6.25 கோடி விலையில் வெளியிடப்பட்டது ரோல்ஸ் ராய்ஸ் டான் கன்வெர்டிபில்

ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனம் இந்தியாவில்  ரூ. 6.25 கோடி டெல்லி ஷோரூம் விலையில்  டான் கன்வெர்டிபில் மாடலை வெளியிட்டுள்ளது   இந்த மாடல் ஆர்டரின் பேரில் மட்டுமே கிடைக்கும். இது ரோல்ஸ் ராய்ஸ்  வ்ரைத் மாடலின்  திறந்து மூடும் மேற்கூரை வசதி கொண்ட மாடல் ஆகும். இந்த மாடல் கடந்த வருடம் நடைபெற்ற ஃபிரான்க் ஃபுர்ட் மோட்டார் கண்காட்சியில் அறிமுகப்படுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இந்த மாடல் பெரும்பாலும் ரோல்ஸ் ராய்ஸ் வ்ரைத் மாடலை போலவே இருக்கிறது கூடுதலாக திறந்து மூடும் மேற்கூரை  வசதி மட்டும் சேர்க்கப்பட்டுள்ளது. இதன் உட்புறம் ஆரஞ்சு மற்றும் கருப்பு நிற வண்ணத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும் ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனம் வாடிக்கையாளரின் விருப்பத்திற்கு ஏற்றவாறு முழுமையாக கஷ்டமைஸ் செய்தும் தரும்.

இந்த மாடலில் 6.6 லிட்டர் டர்போ சார்ஜ் V 12 எஞ்சின் பொருத்தப்பட்டுள்ளது. இது 563 bhp திறனையும் 780 Nm இழுவைதிறனையும் வழங்கும். இந்த மாடல் 100 கிலோ மீட்டர் வேகத்தை வெறும் 4.9 வினாடிகளில் கடக்கும் வல்லமை கொண்டது. மேலும் இதன் மேற்கூரை மணிக்கு 50 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும் போதும் 22 வினாடிகளில் திறந்து மூடிக்கொள்ளும்.

மௌவலின் ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.