இந்தியாவில் வர்த்தகத்தை தொடங்கும் SAIC மோட்டார்

சீனாவை சேர்ந்த SAIC நிறுவனம் இந்தியாவில் வர்த்தகத்தை தொடங்குவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இந்நிறுவனம் 2019 ஆம் ஆண்டு இந்தியாவில் நுழையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மிகப்பழமையான கார் பிராண்டான மோரீஸ் கராஜஸ் எனும் பிரண்டில் தான் இந்தியாவில் வர்த்தகத்தை தொடங்க இருப்பதாகவும் அறிவித்துள்ளது SAIC நிறுவனம். மோரீஸ் கராஜஸ் என்பது பிரிட்டன் நாட்டை சேர்ந்த பழமையான கார் நிறுவனம். 1925 ஆம் ஆண்டில் இருந்து இந்நிறுவனம் இயங்கி வருகிறது. பல மாற்றங்களுக்கு பிறகு 2005 ஆம் ஆண்டு நாஞ்சிங் ஆட்டோமொபைல் குழுமம் இந்நிறுவனத்தை கையக்கப்படுத்தியது. அதன் பிறகு நாஞ்சிங் குழுமம் ஷாங்காய் ஆட்டோமோடிவ் கார்ப்பரேஷன் உடன் இணைந்தால் இந்நிறுவனமும் SAIC நிறுவனத்தின் கீழ் வந்தது. மேலும் இது தொடர்பான விவரங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள மௌவலுடன் தொடர்பில் இருங்கள். 

மௌவலின் ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.