வெளிப்படுத்தப்பட்டது ஸ்கோடா காமிக் காம்பேக்ட் SUV

ஸ்கோடா நிறுவனம் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட காமிக் காம்பேக்ட் SUV மாடலை வெளிப்படுத்தியுள்ளது. இந்த மாடல் 2019 ஆம் ஆண்டு ஜெனிவா மோட்டார் கண்காட்சியில் அறிமுகப்படுத்தப்படும். மேலும் இந்த மாடல் இந்த வருட இறுதி அல்லது அடுத்த வருட ஆரம்பத்தில் இந்தியாவில் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த மாடல் கரோக் SUV மாடலுக்கு கீழாக நிலைநிறுத்தப்படும். இந்த மாடலும் இந்தியாவில் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

இந்த மாடல் புதிய MQB A0 பிளாட்பார்மில் தயாரிக்கப்பட்டுள்ளது. இது புதிய மற்றும் எளிதில் மாற்றக்கூடிய பிளாட்பாரம் ஆகும். இதே பிளாட்பார்மில் தான் வோல்க்ஸ்வேகன் நிறுவனத்தின் சில கார்களும் தயாரிக்கப்படுவது குறிப்பிடத்தக்கது. இந்த மாடல் 4,241mm நீளமும், 1,793mm அகலமும் மற்றும் 1,531mm உயரமும் கொண்டது. முகப்பு கிரில் மற்றும் வடிவமைப்பு என ஸ்கோடா மாடலின் பாரம்பரிய டிசைன் இதிலும் கொடுக்கப்பட்டுள்ளது. உட்புறத்தில் ஆன்ட்ராய்டு ஆட்டோ அல்லது ஆப்பிள் கார் ப்ளே சிஸ்டம், டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர் , ட்யூவல் ஸோன் க்ளைமேட் கன்ட்ரோல் சிஸ்டம், பார்க் அசிஸ்ட், லேன் அசிஸ்ட் மற்றும் பிளைன்ட் ஸ்பாட் டிடெக்சன் என ஏராளமான வசதிகள் கொடுக்கப்பட்டுள்ளது.

இந்த மாடல் 1.0 லிட்டர் மற்றும் 1.5 லிட்டர் பெட்ரோல் என்ஜினிலும் மற்றும் 1.6 லிட்டர்  டீசல் எஞ்சின் தேர்வுகளில் கிடைக்கும். இந்த எஞ்சின்கள் ஆறு ஸ்பீட் மேனுவல் மற்றும் ஏழு ஸ்பீட் DSG டிரான்ஸ்மிஷன் தேர்வுகளில் கிடைக்கும். மேலும் இந்த மாடல் 1.0 லிட்டர் CNG எஞ்சின் தேர்விலும் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால், இந்தியாவில் இந்த மாடல் எந்த எஞ்சினுடன் வெளியிடப்படும் என்பது பற்றி எந்த ஒரு தகவலும் இல்லை. 

Engines 1.0-litre TSI 1.0-litre TSI 1.5-litre TSI 1.6-litre TDI 1.0-litre G-TEC
Power 95 PS 115 PS 150 PS 115 PS 90 PS
Torque 175 Nm 200 Nm 250 Nm 250 Nm 160 Nm
Transmission 5-speed MT 7-speed DSG 7-DSG/ 6-MT 7-DSG/ 6-MT 6-speed MT

 

 

மேலும் விவரங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள மௌவலுடன் தொடர்பில் இருங்கள். 

மௌவலின் ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.