கரோக் SUV மாடலின் டீசர் படங்களை வெளியிட்டது ஸ்கோடா

ஸ்கோடா நிறுவனம் கரோக் SUV மாடலின் டீசர் படங்களை வெளியிட்டுள்ளது. இந்த மாடல் இந்த மாத இறுதிக்குள் வெளிப்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இந்த மாடல் ஏற்கனவே விற்பனையில் இருக்கும் எட்டி மாடலுக்கு மாற்றாக நிலைநிறுத்தப்படும்.

ஸ்கோடா நிறுவனம் விரைவில் வெளியிட இருக்கும் கோடியாக் SUV மாடலின் அடிப்படையில் தான் இந்த மாடலும் வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும் இது ஒரு சிறிய கோடியாக் SUV போல தான் தோற்றமளிக்கிறது. முகப்பு கிரில் மற்றும் வடிவமைப்பு என ஸ்கோடா மாடலின் பாரம்பரிய டிசைன் இதிலும் கொடுக்கப்பட்டுள்ளது.

எஞ்சின் தொடர்பான தெளிவான தகவல்கள் ஏதும் வெளியிடப்படவில்லை. எனினும்  ஆட்டோமேட்டிக் கியர் பாக்ஸ் மற்றும் ஆல் வீல் டிரைவ் சிஸ்டம் ஆகியவையும் இந்த மாடலில் கிடைக்கும். இந்த மாடல் 4382mm நீளமும், 1841mm அகலமும் மற்றும் 1605mm உயரமும் கொண்டது. இந்த மாடல் இந்தியாவில்  கோடியாக் மாடல் வெளியிட்ட பிறகு வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மௌவலின் ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.