ஸ்கோடா கோடியாக் SUV மாடலின் உட்புற வடிவமைப்பு வெளிப்படுத்தப்பட்டது

ஸ்கோடா நிறுவனம் ஏராளமான வெளிப்புற வடிவமைப்பு படங்களை வெளியிட்டுள்ள நிலையில் முதன் முதலாக கோடியாக் SUV  மாடலின் உட்புற வடிவமைப்பு படங்களை வெளியிட்டுள்ளது. சூப்பர்ப் மாடலின் சில பாகங்கள் இதில் பயன்படுத்தப்பட்டுள்ளது தெளிவாக தெரிகிறது. எனினும் இந்த மாடல் அனைத்து விதமான சொகுசு உபகரணங்களும் கொண்ட மாடலாக இது இருக்கும் என்பது படத்தில் தெரிகிறது. மேலும் இந்த மாடல் 5 மற்றும் 7 பேர் அமரக்கூடிய இருக்கை கொண்டதாக கிடைக்கும் எனவும் தெரிகிறது.

இந்த மாடல் 2017 ஆம் ஆண்டு தொடக்கத்தில் இந்தியாவில் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன்  பெயரை கோடியாக் எனவும் இதன் டீசர் வரைபடங்களையும்  சில நாட்களுக்கு முன்பு தான் அதிகாரப்பூர்வமாக வெளிப்படுத்தியது ஸ்கோடா நிறுவனம்.  இது விசன் S கான்செப்டின் தயாரிப்பு நிலை மாடல் ஆகும். அலாஸ்காவில் வாழும் கோடியாக் எனும் கரடியின் பெயரிலிருந்தும் மேலும் கோடியாக் எனும் தீவின் பெயரிலிருந்தும் இப்பெயர் பெறப்பட்டுள்ளதாக ஸ்கோடா நிறுவனம் அறிவித்துள்ளது.

முகப்பு கிரில் மற்றும் வடிவமைப்பு என ஸ்கோடா மாடலின் பாரம்பரிய டிசைன் தத்பரியத்தில் அடுத்த தலைமுறைக்கு ஏற்ற அம்சங்களை புகுத்தி இந்த மாடலை வடிவமைத்துள்ளது ஸ்கோடா நிறுவனம். இது பார்பதற்கு முழுமையான மற்றும் பெரிய SUV போல் தோற்றத்தை தருகிறது. இந்த மாடல் ஸ்கோடா எட்டி மாடலை விட பெரியதாக இருக்கும். இந்த மாடலில் 1.6 லிட்டர் பெட்ரோல் மற்றும் 2.0 லிட்டர் டீஸல் என்ஜின் பொருத்தப்பட்டிருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

மேலும் விவரங்களை தெரிந்து கொள்ள மௌவளுடன் தொடர்பில் இருங்கள்.

மௌவலின் ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.