கோடியாக் SUV யின் டீசர் வரைபடங்களை வெளியிட்டது ஸ்கோடா

ஸ்கோடா நிறுவனம் கோடியாக் SUV யின் டீசர் வரைபடங்களை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டது. கான்செப் மாடலில் உள்ள அனைத்தும் இந்த வரைபடத்தில் உள்ளது. இந்த மாடல் இந்த வருட இறுதியில் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படும். இதன்  பெயரை கோடியாக் என சில நாட்களுக்கு முன்பு தான் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது ஸ்கோடா நிறுவனம். இது விசன் S கான்செப்டின் தயாரிப்புநிலை மாடல் ஆகும். அலாஸ்காவில் வாழும் கோடியாக் எனும் கரடியின் பெயரிலிருந்தும் மேலும் கோடியாக் எனும் தீவின் பெயரிலிருந்தும் இப்பெயர் பெறப்பட்டுள்ளதாக ஸ்கோடா நிறுவனம் அறிவித்துள்ளது.

முகப்பு கிரில் மற்றும் வடிவமைப்பு என ஸ்கோடா மாடலின் பாரம்பரிய டிசைன் தத்பரியத்தில் அடுத்த தலைமுறைக்கு ஏற்ற அம்சங்களை புகுத்தி இந்த மாடலை வடிவமைத்துள்ளது ஸ்கோடா நிறுவனம். இது பார்பதற்கு முழுமையான மற்றும் பெரிய SUV போல் தோற்றத்தை தருகிறது. இந்த மாடல் ஸ்கோடா எட்டி மாடலை விட பெரியதாக இருக்கும்.

மேலும் இந்த மாடல் 5, 6 மற்றும் 7 பேர் அமரக்கூடிய இருக்கை கொண்டதாக கிடைக்கும். இந்த மாடலில் 1.6 லிட்டர் பெட்ரோல் மற்றும் 2.0 லிட்டர் டீஸல் என்ஜின் பொருத்தப்பட்டிருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் விவரங்களை தெரிந்து கொள்ள மௌவளுடன் தொடர்பில் இருங்கள்.

மௌவலின் ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.