ரூ. 23.52 லட்சம் ஆரம்ப விலையில் வெளியிடப்பட்டது புதிய ஸ்கோடா சூப்பர்ப்

ஸ்கோடா நிறுவனம்  புதிய மூன்றாம் தலைமுறை  சூப்பர்ப் மாடலை ரூ. 23.52 லட்சம்  சென்னை ஷோ ரூம் ஆரம்ப விலையில்  வெளியிட்டுள்ளது. ஸ்கோடா நிறுவனம் தனது இணையத்தில் 2016 ஆம் ஆண்டு சூப்பர்ப் மாடலை சில நாட்களுக்கு முன்பு தான்  அறிமுகம் செய்தது.

புதிய தலைமுறைக்கு ஏற்றவாறு ப்ரொஜெக்டர் முகப்பு விளக்குகள், பகல் நேரத்தில் ஒளிரும் LED விளக்குகள் என வெளிப்புறத்தில் நிறைய ஒப்பனை மாற்றங்கள் செய்யப்படுள்ளன. மேலும் உட்புறத்திலும் டச் ஸ்க்ரீன் சிஸ்டம், தானியங்கி குளிரூட்டி என ஏராளமான வசதிகள் கொடுக்கப்பட்டுள்ளன.

இந்த மாடல் அதே 1.8 லிட்டர் பெட்ரோல் மற்றும் 2.0 லிட்டர் டீசல் என்ஜினிலேயே கிடைக்கும். இதன் பெட்ரோல் என்ஜின் 178 Bhp திறனை  வழங்கும். இது மேனுவல் மற்றும் ஆட்டோமெடிக் என இரண்டு விதங்களிலும் கிடைக்கும். இதன் டீசல் என்ஜின் 175 Bhp திறனை வழங்கும். இதன் டீசல் என்ஜின் மாடல் ஆட்டோமெடிக் கியர் பாக்ஸில் மட்டுமே கிடைக்கும்.

இந்த மாடல் ஹோண்ட அக்கார்ட், வோல்க்ஸ் வேகன் பேசட் போன்ற மாடல்களுக்கு போட்டியாக இருக்கும். இந்த மாடல் மொத்தம் இந்து வேரியண்டுகளில் கிடைக்கிறது. 
வேரியன்ட் வாரியாக சென்னை ஷோ ரூம் விலை விவரம்:
Style 1.8 TSI (பெட்ரோல்)      -ரூ. 23,52,352
Style 1.8 TSI AT (பெட்ரோல்) - ரூ.24,80,630
Laurin & Klement 1.8 TSI AT (பெட்ரோல்) -ரூ.27,88,978
Style 2.0 TDI AT (டீசல்) -ரூ. 27,37,504
Laurin & Klement 2.0 TDI AT (டீசல்) -ரூ.30,45,750

மௌவலின் ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.